இந்தியாவில் தோன்றிய முதல் மாவட்டம் தமிழகத்தில் தான் உள்ளது.., எது தெரியுமா?
which is the india first district- பொதுவாக, இந்தியாவில் மொத்தம் 766 மாவட்டங்கள் உள்ளது.
ஆனால், இந்தியாவின் முதல் மாவட்டம் என்ற பெருமை பெற்றது நம்முடைய தமிழ்நாட்டில் உள்ள சேலம் மாவட்டம்தான்.
வரலாறு, தொழில், சுற்றுலா என பல்வேறு துறைகளில் சேலம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
சேலம் மாவட்டம் 1792ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் தேதி ஆங்கிலேயர் ஆட்சியில் உருவாக்கப்பட்டது. அப்போது நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளும் சேலம் மாவட்டத்தின் கீழ் இருந்தன.

அலெக்சாண்டர் ரீட் 1792 முதல் 1799ஆம் ஆண்டு வரை சேலம் மாவட்ட ஆட்சியராக பணியாற்றினார்.
சேலம் நகராட்சி 1866ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1ஆம் தேதி சேலம் தினம் கொண்டாடப்படுகிறது.
சேலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மாம்பழ உற்பத்தி அதிகமாக இருப்பதால், இது மாங்கனி மாநகரம் என்று அழைக்கப்படுகிறது.
இங்கு இரும்பு உருக்காலை அமைந்துள்ளதால் ஸ்டீல் சிட்டி என்றும் அழைக்கப்படுகிறது.
சேலத்தில் ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காடு, மேட்டூர் அணை மற்றும் பூங்கா, குரும்பம்பட்டி வன உயிரியல் பூங்கா உள்ளிட்டவை முக்கியமான சுற்றுலா தலங்களாக உள்ளன.
1937ஆம் ஆண்டு இந்தியாவிலேயே முதல்முறையாக மதுவிலக்கு அமல்படுத்தப்பட்ட மாவட்டம் சேலம் என்று கூறப்படுகிறது.
சேலத்தின் முக்கிய தொழில்களில் கைத்தறி, ஜவ்வரிசி மற்றும் வெள்ளி கொலுசு உற்பத்தி ஆகியவை அடங்கும்.
மேலும், மரவள்ளிக்கிழங்கு, பூக்கள், பழங்கள் உள்ளிட்ட விவசாயப் பொருட்களின் உற்பத்தியும் இங்கு அதிகமாக உள்ளது.

சேலம் மாவட்டத்தில் கோட்டை மாரியம்மன் கோவில், சுகவனேஸ்வரர் கோவில், கோட்டை அழகிரிநாதர் கோவில், தாரமங்கலம் கைலாசநாதர் கோவில், அயோத்தியபட்டினம் ராமர் கோவில், முத்துமலை முருகன் கோவில் உள்ளிட்ட பல்வேறு புகழ்பெற்ற வழிபாட்டுத் தலங்கள் உள்ளன.
மேலும், திப்பு சுல்தான் கட்டியதாக கூறப்படும் ஜமா மஸ்ஜித்தும் இங்கு உள்ளது.
ஆறகளூர் புத்தர் கோவில், தாரமங்கலம் கைலாசநாதர் கோவில், கோட்டை மாரியம்மன் கோவில், லெக்லர் சர்ச் உள்ளிட்டவை குறிப்பிடத்தக்கவை. மகாத்மா காந்தி தங்கிய அஞ்சல் அலுவலகமும் சேலத்தின் முக்கிய வரலாற்றுச் சின்னங்களில் ஒன்றாக உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |