இந்தியாவின் மிக நீளமான மெட்ரோ ரயில் பாதை.., எது தெரியுமா?
இந்தியாவில் மெட்ரோ நெட்வொர்க்கானது கடந்த சில ஆண்டுகளாக வேகமாக விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த மெட்ரோ ரயில் பாதை முக்கிய நகர்ப்புற மற்றும் புறநகர் பகுதிகளை இணைக்கிறது.
இந்தியாவில் மெட்ரோ, போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், பயண நேரத்தைக் குறைக்கவும் பெரிதளவில் உதவுகிறது.
அந்தவகையில், இந்தியாவின் மிக நீளமான மெட்ரோ ரயில் பாதை எது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
அதன்படி, டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் தனது மெட்ரோ ரயில் பாதையை விரிவுபடுத்துவதில் தொடர்ந்து பணியாற்றி வருகிறது.
அந்தவகையில் மஜ்லிஸ் பார்க்கிலிருந்து - ஷிவ் விஹாரை இணைக்கும் டெல்லி மெட்ரோவின் பிங்க் லைன், 71.6 கிமீ நீளம் கொண்டது.
நீளமான இந்த மெட்ரோ ரயில் பாதையில் 46 ஸ்டேஷன்களும், அதிகபட்சமாக 12 இன்டர்சேஞ்ச் ஸ்டேஷன்களும் உள்ளன.
இந்த பாதையில் ஆசாத்பூர், நேதாஜி சுபாஸ் பிளேஸ், பஞ்சாபி பாக் வெஸ்ட், ரஜோரி கார்டன், டில்லி ஹாட்-ஐஎன்ஏ, லஜ்பத் நகர், மயூர் விஹார் I, ஆனந்த் விஹார் ISBT, கர்கர்டூமா, வெல்கம், மௌஜ்பூர் மற்றும் மஜ்லிஸ் பார்க் ஆகிய இன்டர்சேஞ்ச் ஸ்டேஷன்கள் உள்ளன.
பிங்க் லைன் சமீபத்தில் விரிவுபடுத்தப்பட்டு, புராரி, ஜகத்பூர் கிராமம், ஜரோடா மஜ்ரா, சூர்கத், கஜூரி காஸ், சோனியா விஹார், பஜன்புரா மற்றும் யமுனா விஹார் ஆகிய எட்டு எலிவேட்டட் ஸ்டேஷன்கள் சேர்க்கப்பட்டது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |