குண்டு துளைக்காத ஜன்னல்கள்.., உலகின் மிக விலையுயர்ந்த ஹொட்டல் எது?
12 ஆடம்பரமான படுக்கையறைகள், குண்டு துளைக்காத ஜன்னல்கள் கொண்ட உலகின் மிக விலையுயர்ந்த ஹொட்டல் சூட் இதுதான்.
விலையுயர்ந்த ஹொட்டல்
ஆடம்பர தங்குமிடங்களைப் பொறுத்தவரை, சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் உள்ள ஹொட்டல் பிரசிடென்ட் வில்சனில் உள்ள ராயல் பென்ட்ஹவுஸ் சூட் நற்பெயரைப் பெற்றுள்ளது.
உலகின் மிக விலையுயர்ந்த சூட் என்று பெரும்பாலும் பாராட்டப்படும் இங்கு ஒரு இரவு தங்குவதற்கு 80,000 டொலர் முதல் 100,000 டொலர் (சுமார் ரூ. 70-88 லட்சம்) வரை செலவாகும்.
இது உலகெங்கிலும் உள்ள அரச குடும்ப உறுப்பினர்கள், உலகத் தலைவர்கள் மற்றும் A-லிஸ்ட் பிரபலங்களின் விருப்பமான தேர்வாக இருந்து வருகிறது.
ஹொட்டலின் 8-வது மாடி முழுவதும் பரந்து விரிந்துள்ள ராயல் பென்ட்ஹவுஸ் சூட் கிட்டத்தட்ட 1,680 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இது வானத்தில் ஒரு அரண்மனையைப் போல தோற்றமளிக்கிறது.
இங்கு, 12 ஆடம்பரமான படுக்கையறைகள் மற்றும் 12 பளிங்கு குளியலறைகள், விருந்தினர்கள் தனியார் லிஃப்ட், குண்டு துளைக்காத ஜன்னல்கள் ஆகியவை உள்ளன.
இந்த அறை 24 மணி நேரமும் சேவையை வழங்குகிறது, அதில் ஒரு தனிப்பட்ட உதவியாளர், சமையல்காரர் உள்ளனர்.
தனியார் படகுப் பயணங்களை ஏற்பாடு செய்வது முதல் பிரத்யேக ஷாப்பிங் சுற்றுப்பயணங்களை நிர்வகிப்பது வரை பல சேவைகளை செய்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |