இந்தியாவில் ஆண் நதி என்று அழைக்கப்படும் ஒரே ஒரு நதி.., எது தெரியுமா?
இந்தியாவின் வளங்களில் ஆறுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இந்தியா முழுவதும், ஆறுகள் தெய்வீகத்தின் சின்னமாகவும், புனிதமானவையாகவும் போற்றப்படுகின்றன.
அதன்படி, இந்தியாவில் உள்ள பெரும்பாலான நதிகள் பெண் தெய்வங்களாகக் கருதப்படுகின்றன.
அந்தவகையில், இந்தியாவில் ஆண் நதி என்று அழைக்கப்படும் ஒரே ஒரு நதி பிரம்மபுத்திரா நதி ஆகும்.

பிரம்மபுத்திரா என்ற பெயருக்கு பிரம்மாவின் மகன் என்று அர்த்தம் என்பதால் வடகிழக்கு இந்தியாவின் பல பகுதிகளில் இந்த நதி ஆண் தெய்வமாக மதிக்கப்படுகிறது.
உலகின் அகலமான நதிகளில் ஒன்றான பிரம்மபுத்திரா மழைக்காலத்தில் சுமார் 20 கிலோமீட்டர் வரை இதன் அகலம் விரிவடைகிறது.
உலகின் மிகப்பெரிய ஆற்றுத் தீவான மஜூலி பிரம்மபுத்திரா நதியால் உருவாக்கப்பட்டது.
பிரம்மபுத்திரா நதி, திபெத்தில் யர்லுங் சாங்போ என்ற பெயரில் தொடங்கி, அருணாச்சலப் பிரதேசம் வழியாக இந்தியாவுக்குள் நுழைகிறது.

பின்னர் அசாம் மாநிலத்தில் பிரம்மபுத்திரா என அழைக்கப்பட்டு அதன் பிறகு பங்களாதேஷ் நாட்டுக்குள் சென்று கங்கை நதி உடன் இணைகிறது.
இந்த நதி ஒவ்வொரு ஆண்டும், அதன் பருவமழை வெள்ளம் அசாமின் விவசாய நிலங்களை வளமாக்குகிறது.
பிரம்மபுத்திரா நதி பரந்த அளவு, சக்திவாய்ந்த நீரோட்டம், பல நாடுகளைக் கடக்கும் பயணம் காரணமாக உலகின் மிகவும் சிறப்பான நதிகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |