உலகில் மிகவும் தூய்மையான உணவுப் பொருள்.., எது தெரியுமா?
நெய் தான் உலகின் மிகவும் தூய்மையான உணவுப் பொருளாக உள்ளது.
உலகில் மிகவும் தூய்மையான உணவுப் பொருள் என்ற கேள்விக்கு பல்வேறு சுகாதார நிபுணர்கள் நெய் என்று பதில் அளித்துள்ளார்கள்.
பழங்கால சாஸ்திரங்களில் கூட நெய் மிகவும் புனிதமாக கருதப்படுகிறது.
பல நூறு ஆண்டுகளாக பசு நெய்யை முன்னோர்கள் உணவு பொருள் மட்டும் இன்றி, பூஜைகளுக்கும் நெய் தான் பயன்படுத்தப்படுகிறது.
விஞ்ஞானத்தின் அடிப்படையிலும் பசு நெய் தான் மிகவும் தூய்மையானதாக கருதப்படுகிறது. இதில் சிறிதளவு கூட கலப்படம் கிடையாது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நெய் என்ற பெயரில் கலப்படமான பொருட்கள் சந்தையில் விற்பனை செய்யப்படுவதை தூய்மையான உணவு என்று கூற முடியாது.
ஆனால் வீட்டிலேயே பால் வெண்ணையில் இருந்து தயாரிக்கப்படும் நெய் முழுக்க முழுக்க தூய்மையானது என்று கூறலாம்.
உடலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமான நெய்யில் வைட்டமின் ஏ, டி, இ, கே உள்ளிட்ட முக்கிய சத்துப் பொருட்கள் உள்ளன.
நெய்யை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் மூளை சிறப்பாக செயல்படவும், சருமத்திற்கு பொலிவை ஏற்படுத்தவும், எலும்புகளை வலுப்படுத்தவும் உதவுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |