இந்தியாவின் பணக்கார மாநிலம்.., எது தெரியுமா?
இந்தியா தற்போது உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக இருக்கிறது.
இந்தியா இத்தகைய உயரத்தை எட்டுவதற்கு சில மாநிலங்களின் பங்களிப்பு மிகப்பெரிய காரணமாக இருக்கிறது.
2024ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி 8.2% உயர்ந்து 47.24 லட்சம் கோடி ரூபாய் என அதிகரித்தது.
அந்தவகையில், இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருக்கும் மாநிலங்களை பார்க்கலாம்.
Gross State Domestic Product எனப்படும் ஜிஎஸ்டிபி அடிப்படையில் இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பது மகாராஷ்டிரா மாநிலம்.
தேசிய ஜிடிபியில் 13.30 சதவீத பங்களிப்பை தருகிறது. இதன் ஜிஎஸ்டிபி 42.67 லட்சம் கோடி ரூபாயாக இருக்கிறது. மேலும், தனிநபர் வருமானம் 2. 89 லட்சம் ரூபாயாக இருக்கிறது.
இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது தமிழ்நாடு.
தேசிய ஜிடிபிக்கு 8.90 சதவீத பங்களிப்பை தருகிறது. இங்கே ஜிஎஸ்டிபி 31.55 லட்சம் கோடி ரூபாயாக இருக்கிறது.
தமிழ்நாட்டில் 2023-24 ஆம் ஆண்டு நிலவரப்படி தனிநபர் வருமானம் 3.5 லட்சங்களாக இருக்கிறது.
அடுத்ததாக கர்நாடக மாநிலம் 8.20 சதவீத ஜிடிபி பங்களிப்புடன் இருக்கிறது. இந்த மாநிலத்தின் ஜிஎஸ்டிபி என்பது 28.09 லட்சம் கோடிகள் ஆகும்.
அதேபோல், கர்நாடகாவில் தனிநபர் வருமானம் 3.31 லட்சம் ரூபாயாக இருக்கிறது .
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |