தமிழ்நாட்டின் மிகச்சிறிய மாவட்டம் எது தெரியுமா?
Which is the smallest district in Tamil Nadu?- தமிழ்நாடு தற்போது 38 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாவட்டமும் அதன் வரலாறு, கலாச்சாரம், இயற்கை மற்றும் பொருளாதார சிறப்புகளால் தனித்துவம் பெற்றுள்ளது.
அந்தவகையில், தமிழ்நாட்டின் மிகச்சிறிய மாவட்டம் கன்னியாகுமரி ஆகும். இதன் மொத்த பரப்பளவு 1,672 ச.கி.மீ. ஆகும்.
பரப்பளவில் சிறிய மாவட்டமாக இருந்தாலும், கன்னியாகுமரி வரலாறு, கலாச்சாரம் மற்றும் இயற்கை வளங்களில் சிறந்து விளங்குகிறது.

கன்னியாகுமரி மாவட்டம் கடலும், இயற்கை அழகும் நிறைந்த முக்கிய சுற்றுலா தலமாக உள்ளது.
இங்கு சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனத்தை காண்பது முக்கியமான சுற்றுலா அனுபவமாக கருதப்படுகிறது.
மேலும், திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் பாறை நினைவிடம் ஆகியவை கன்னியாகுமரியின் முக்கிய அடையாளங்களாக உள்ளன.
கன்னி இளவரசியாக போற்றப்படும் கன்னியாகுமரி அம்மனின் பெயரிலிருந்தே இப்பகுதிக்கு கன்னியாகுமரி என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது.
கிறிஸ்தவர்கள், இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் என பல்வேறு சமூகத்தினர் கன்னியாகுமரி மாவட்டத்தில் வாழ்கின்றனர்.
கன்னியாகுமரியின் மற்றொரு முக்கிய சிறப்பு மருந்துவாழ் மலை. இந்த மலை ராமாயணத்துடன் தொடர்புடையதாக புராணங்களில் கூறப்படுகிறது.

அனுமன் சஞ்சீவினி மூலிகையை தேடி மலையை தூக்கி சென்றபோது, அதன் ஒரு பகுதி கீழே விழுந்ததாகவும், அதுவே மருந்துவாழ் மலையாக மாறியதாகவும் நம்பப்படுகிறது.
மருத்துவ குணம் கொண்ட பல்வேறு மூலிகைகள் இந்த மலையில் காணப்படுவதாக கூறப்படுகிறது.
பரப்பளவில் தமிழ்நாட்டின் மிகச்சிறிய மாவட்டமாக இருந்தாலும், சுற்றுலா, வரலாறு, கலாச்சாரம் மற்றும் இயற்கை வளங்களில் கன்னியாகுமரி முக்கியத்துவம் பெற்ற மாவட்டமாக திகழ்கிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |