இந்தியாவில் டிக்கெட் இல்லாமல் பயணிக்க அனுமதிக்கும் ஒரே ஒரு ரயில்: எது தெரியுமா?
இந்தியாவில் பயணிகளின் பயண தேவையை தீர்த்து வைப்பதில் ரயில் துறைக்கு பெரிய பங்கு உள்ளது.
குறைந்த கட்டணம், பாதுகாப்பான பயணம், அதிவேகத்தில் செல்லக் கூடியது என்பதால் சாமானிய மக்கள் கூட ரயில் பயணத்தை தான் விரும்புகிறார்கள்.
அந்தவகையில், இந்தியாவில் டிக்கெட் இல்லாமல் பயணிக்க கூடிய ஒரே ரயில் எது என்பது குறித்து பார்க்கலாம்.

பல ஆண்டுகளாக இது தொடர்ந்து இலவசமாகவே இயக்கி வருகிறது. இந்த ரயிலின் பெயர் பக்ரா–நங்கல் (Bhakra–Nangal) ஆகும்.
இந்த ரயில் பஞ்சாப் மற்றும் இமாச்சலப் பிரதேசத்திற்கு இடையே 75 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது.
நிதானமாக இயங்கும் பழமையான பயணிகள் ரயிலான இது மலைகள், நதிக்கரைகள், வனப்பகுதிகள் மற்றும் குறுகிய சுரங்கங்கள் வழியாகச் செல்கிறது.
இந்த ரயிலானது பஞ்சாப் மற்றும் இமாச்சலப் பிரதேசத்திற்கு இடையே தினமும் இயக்கப்படுகிறது.

மெதுவாக இயங்கும் இந்த ரயில் சட்லஜ் நதியைக் கடந்து செல்கிறது, சிவாலிக் மலைகளின் ஓரமாகப் பயணிக்கிறது.
மேலும் மூன்று சுரங்கப்பாதைகளைக் கடந்து, வழியில் உள்ள ஆறு சிறிய ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது.
இந்த ரயிலுக்கு எரிபொருள், பராமரிப்பு செலவுகள் இருந்தாலும், இந்த ரயிலில் பயணிக்க டிக்கெட் எடுக்க தேவையில்லை மற்றும் எந்த அபராதமும் இல்லை.
இந்த சிறப்பு ரயில் இந்திய ரயில்வேயால் இயக்கப்படவில்லை, ஒரு பெரிய உள்கட்டமைப்புத் திட்டத்துடன் தொடர்புடைய ஒரு அரசு அதிகார அமைப்பால் இயக்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |