எந்த நோய்க்கு எந்த ஜூஸ் குடிப்பது நல்லது?- மருத்துவரின் கூற்று
பழங்கள், காய்கறிகளில் உடலுக்கு தேவையான வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன.
அவற்றைக் கொண்டு தயாரிக்கும் ஜூஸ்களை குடித்து வர உடல் ஆரோக்கியம் மற்றும் நோயெதிர்ப்பு சக்தி மேம்படும் என்று மருத்துவர் தெரிவித்துள்ளார்.
அந்தவகையில், எந்த உடல்நல பிரச்சனைகளுக்கு எந்த ஜூஸ் குடிக்கலாம் என்று பார்க்கலாம்.

சளி, காய்ச்சல்- அன்னாசி, இஞ்சி, பூண்டு சேர்த்து ஜூஸ் செய்து குடித்தால், நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவும்.
தலைவலி- வெள்ளரிக்காய், செலரி, க்ரீன் ஆப்பிள் ஜூஸ் உடலை நீரேற்றத்துடன் வைத்திருந்து, நீரிழப்பால் ஏற்படும் தலைவலியை குறைக்க உதவும்.
மலச்சிக்கல்- கேரட், ஆப்பிள், பேரிக்காய் ஜூஸ் நார்ச்சத்து வழங்கி மலச்சிக்கலுக்கு நிவாரணம் அளிக்கும்.
அல்சர்- முட்டைக்கோஸ் மற்றும் செலரியை ஜூஸாகவோ அல்லது உணவாகவோ எடுத்துக்கொண்டால் அல்சர் பாதிப்பை குறைக்க உதவும்.
உயர் ரத்த அழுத்தம்- பீட்ரூட், ஆப்பிள், இஞ்சி ஜூஸ் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும்.
உடல் சோர்வு- ஆப்பிள், பீட்ரூட், கேரட் ஜூஸ் உடலுக்கு ஆற்றல் அளித்து சோர்வை குறைக்க உதவும்.
மன அழுத்தம்- வாழைப்பழம், ஸ்ட்ராபெர்ரி, பேரிக்காய் ஜூஸ் உடலை ரிலாக்ஸாக வைத்திருக்க உதவுகிறது. இதில் மக்னீசியம், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளன.
சிறுநீரக ஆரோக்கியம்- தர்பூசணி மற்றும் மல்லி விதை சேர்த்து தயாரிக்கும் ஜூஸ் சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்த உதவும்.
கண் மற்றும் சரும ஆரோக்கியம்- கேரட், பீட்ரூட், குடைமிளகாய் ஜூஸ் கண் பார்வை மற்றும் சரும பொலிவுக்கு உதவும்.
கல்லீரல் ஆரோக்கியம்- இஞ்சி, பூண்டு, மஞ்சள், எலுமிச்சை, பட்டை சேர்த்து காய்ச்சிய நீரை குடிப்பது கல்லீரல் ஆரோக்கியத்திற்கு உதவும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |