முருகனை வழிபட வேண்டிய ராசிகள் எது?
கடவுள் முருகன் இந்து சமயத்தில் போர்க்கடவுள், ஞானம் மற்றும் வெற்றியின் கடவுளாக வணங்கப்படுகிறார்.
சிவன் மற்றும் பார்வதியின் மகனான இவர், தமிழ் கலாச்சாரத்தில் தமிழ்க் கடவுள் என்று தமிழர்களால் போற்றப்படுகிறார்.
கலியுக கடவுளான முருகன் ஆறுமுகங்கள் கொண்டவர் மற்றும் மயில் இவரது வாகனமாகும்.
இவர் கையில் வைத்திருக்கும் வேல் ஞானத்தையும், தீய சக்திகளை அழிக்கும் ஆற்றலையும் குறிக்கிறது.
முருகன் ஞானத்தின் கடவுளாகவும், தன்னை நாடும் பக்தர்களுக்கு தைரியத்தையும் அருளையும் வழங்கும் தெய்வமாகவும் அறியப்படுகிறார்.
சங்க இலக்கியமான தொல்காப்பியத்தில், முருகன் குறிஞ்சி நிலத்தின் தலைவனாகிய சேயோன் என்று போற்றப்படுகிறார்.
முருகப்பெருமானின் புகழ்பெற்ற ஆறு புனிதத் தலங்களான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி மற்றும் பழமுதிர்ச்சோலை அறுபடை வீடுகள் என்று அழைக்கப்படுகின்றன.
மேலும், கந்த சஷ்டி, தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திரம் ஆகியவை முருகப் பெருமானுக்குரிய மிக முக்கிய விழாக்களாகும்.
அந்தவகையில், முருகனை வழிபட வேண்டிய ராசிகள் குறித்து இராம்ஜி சுவாமிகள் இக்காணொளியில் பகிர்ந்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |