இந்தியா - பிரித்தானியா இடையே FTA ஒப்பந்தம்; எந்த துறைகளுக்கு லாபம்?

United Kingdom India
By Karthikraja Jun 18, 2026 02:27 PM GMT
Report

இந்தியா மற்றும் பிரித்தானியாவிற்கு இடையேயான FTA ஒப்பந்தம் 15 ஜூலை முதல் அமுலுக்கு வர உள்ள நிலையில், எந்த துறைகளுக்கு லாபம் என்பதை பார்க்கலாம்.

இந்தியா - பிரித்தானியா FTA ஒப்பந்தம்

இந்தியா மற்றும் பிரித்தானியாவிற்கு இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்(FTA) வரும் 15 ஜூலை 2026 அன்று முதல் அமுலுக்கு வருகிறது. 

இந்தியா - பிரித்தானியா இடையே FTA ஒப்பந்தம்; எந்த துறைகளுக்கு லாபம்? | Which Sector Will Benefit In India Uk Fta Deal

விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம் (CETA) என அதிகாரப்பூர்வமாக அறியப்படும் இந்த வர்த்தக ஒப்பந்தத்துடன் இரட்டைப் பங்களிப்பு ஒப்பந்தம் (DCC) எனப்படும் சமூகப் பாதுகாப்பு ஒப்பந்தமும் நடைமுறைக்கு வரும். 

இந்த ஒப்பந்தம், இந்தியாவும் பிரித்தானியாவும் 2030 ஆம் ஆண்டுக்குள் இருதரப்பு வர்த்தகத்தை 100 பில்லியன் டொலராக இரட்டிப்பாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 

பிரித்தானிய சந்தைக்குள் நுழையும் 85% அதிகமான இந்தியப் பொருட்களுக்கு உடனடி வரிவிலக்கு அளிக்கப்படும்

இதன் மூலம், பிரித்தானியாவில் தயாரிக்கப்படும் கார்களுக்கான சுங்க வரிகள் 110 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாகக் குறைக்கப்பட்டு அவற்றுக்கென ஒரு புதிய இறக்குமதி ஒதுக்கீடும் (quota) நிர்ணயிக்கப்படும். 

இந்திய அரசின் முடிவால் ஒரே நாளில் ரூ.4,700 கோடியை இழந்த நிறுவனம்

இந்திய அரசின் முடிவால் ஒரே நாளில் ரூ.4,700 கோடியை இழந்த நிறுவனம்

சொகுசு மின்சார வாகனங்கள் மீதான இறக்குமதி வரி 100 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக குறைக்கப்படும்.

இங்கிலாந்து விஸ்கி மீதான இறக்குமதி வரிகள் படிப்படியாக 150 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாகக் குறைக்கப்படும்.

பிரித்தானியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்தியப் பொருட்கள் மீது விதிக்கப்பட்டிருந்த வரிகள், அதாவது பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் மீது 70 சதவீதம் வரையிலும், கடல்சார் பொருட்கள் மீது 21.5 சதவீதம் வரையிலும் பூஜ்ஜியமாகக் குறைக்கப்படும்.

மேலும், பொறியியல் பொருட்கள் மற்றும் வாகன உதிரிபாகங்கள் மீது 18 சதவீதம் வரையிலும், தோல் மற்றும் காலணிப் பொருட்கள் மீது 16 சதவீதம் வரையிலும், ஜவுளி மற்றும் ஆடைகள் மீது 12 சதவீதம் வரையிலும் விதிக்கப்பட்டிருந்த வரிகள் பூஜ்ஜியமாகக் குறைக்கப்படும்.

இந்தியா தனது சுங்க வரிகளில் சுமார் 90 சதவீதத்தை படிப்படியாகக் குறைக்கும் , மேலும் இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த அடுத்த பத்தாண்டுகளுக்குள் (2036) 85 சதவீத வரிகள் நீக்கப்படும். 

DCC ஒப்பந்தம்

பிரித்தானியாவில், சுமார் 75,000 இந்தியத் தொழில் வல்லுநர்கள் பணிபுரிகின்றனர். அதே நேரத்தில் 900 க்கும் மேற்பட்ட இந்திய நிறுவனங்கள் அங்கு செயல்படுகின்றன.

இவர்களின் சம்பளத்தில் சுமார் 15 சதவீதம் சமூகப் பாதுகாப்பு பங்களிப்புகளுக்காகச் செலுத்தப்படுகிறது. அதாவது, இந்திய வம்சாவளி தொழில் வல்லுநர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஐக்கிய ராச்சிய சமூகப் பாதுகாப்புக்கு சுமார் 0.5 பில்லியன் டாலர் பங்களிக்கின்றனர்.

DCC ஒப்பந்ததின் கீழ், நிறுவனங்களால் இந்தியாவிலிருந்து பிரித்தானியாவிற்கோ அல்லது பிரித்தானியாவிலிருந்து இந்தியாவிற்கோ தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்படும் ஊழியர்கள், அவர்கள் பணிபுரியும் நாட்டில் 5 ஆண்டுகள் வரை சமூகப் பாதுகாப்புப் பங்களிப்புகளைச் செலுத்துவதிலிருந்து விலக்கு பெறுவார்கள்.

ஒரு முதலாளி இந்தியாவில் தனது ஊழியரின் சமூகப் பாதுகாப்பிற்காகப் பங்களித்தால், அவர் இங்கிலாந்தில் பணம் செலுத்த வேண்டியதில்லை. அதற்காக, அவர் ஒரு காப்பீட்டுச் சான்றிதழைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

DCC ஒப்பந்தம் மூலம், அங்குள்ள இந்திய நிறுவனங்களும் தொழிலாளர்களும் பிரித்தானியாவில் செலுத்த வேண்டியிருந்த சுமார் 500 மில்லியன் டொலர் மதிப்புள்ள சமூகப் பாதுகாப்பு கட்டணங்களைச் சேமிக்க முடியும்.

அதேவேளையில், பிரித்தானியாவில் உள்ள மற்ற வெளிநாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் இந்தியர்களுக்கு இந்த விலக்கு கிடைக்காது.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US