இந்தியாவில் அதிகளவு காடுகளை கொண்ட மாநிலம்.., எது தெரியுமா?
பூமியின் மொத்த பரப்பளவில் காடுகள் 31 சதவீதத்தை ஆக்கிரமித்துள்ளன.
அவை ஆக்சிஜன் வழங்குதல், கார்பன் டைஆக்சைடை உறிஞ்சுதல், மழை பெய்ய உதவுதல், மண்ணை பாதுகாத்தல் போன்ற பல முக்கிய பணிகளை செய்கின்றன.
அந்தவகையில், இந்தியாவில் எந்த மாநிலத்தில் அதிகளவு காடுகள் உள்ளது என்பது குறித்து பார்க்கலாம்.
இந்தியாவில் அதிக காடுகளை கொண்ட மாநிலம் என்ற பெருமையை மத்திய பிரதேசம் தொடர்ந்து தக்க வைத்துள்ளது.

இந்திய வன நிலை அறிக்கை (ISFR) 2023 படி, அங்கு சுமார் 77,073 ச.கி.மீ காடுகள் உள்ளது. இது மாநிலத்தின் மொத்த பரப்பளவில் சுமார் 25% ஆகும்.
மத்திய பிரதேச மாநிலம், நாட்டின் சுற்றுச்சூழல் சமநிலையை பாதுகாப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. இங்கு வெப்பமண்டல ஈர மற்றும் உலர் இலையுதிர் காடுகள் அதிகமாக காணப்படுகின்றன.
இங்கு உள்ள கான்ஹா, பந்தவ்கர் போன்ற தேசிய பூங்காக்கள் உலகம் முழுவதும் இருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன.
மத்திய பிரதேச காடுகளில் 5,000க்கும் மேற்பட்ட தாவர இனங்களும், 500க்கும் அதிகமான பறவை இனங்களும் வாழ்கின்றன.

புலிகள், சிறுத்தைகள், காட்டெருமைகள் மற்றும் சதுப்புநில மான்கள் போன்றவை விலங்குகள் இங்கு காணப்படுகின்றன.
இந்த மாநிலத்தில் 11 தேசிய பூங்காக்கள் மற்றும் 25 வனவிலங்கு சரணாலயங்கள் உள்ளன. இதனால் மத்திய பிரதேசம் புலிகள் மாநிலம் என்றும் அழைக்கப்படுகிறது.
மேலும், இங்கு 7,021 சதுர கிமீ மிக அடர்ந்த காடுகள், 33,509 சதுர கிமீ மிதமான அடர்த்தியுள்ள காடுகள் மற்றும் 36,543 சதுர கிமீ திறந்தவெளி காடுகள் உள்ளன.
காடுகளின் பரப்பளவில் மத்திய பிரதேசத்தின் பங்கு நாட்டின் கார்பன் சேமிப்பு மற்றும் காலநிலை பாதுகாப்பு முயற்சிகளில் முக்கிய இடத்தை வகிக்கிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |