தெரு நாய்கள் அதிகமாக உள்ள மாநிலம் எது? மொத்தம் 8,958,143 நாய்க்கடிகள் பதிவு
இந்தியாவில் நாய்க்கடிகள் பதிவு அதிகமானதால் உச்சநீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
எந்த மாநிலம்?
டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பகுதியில் (NCR) தெருநாய்களைப் பிடித்து, அவற்றை தங்குமிடங்களுக்கு மாற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்தியாவில் தெருநாய் கடி அச்சுறுத்தல் காரணமாகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நவம்பர் 2023 கணக்கெடுப்பின்படி டெல்லியில் தெருநாய்களின் எண்ணிக்கை 55,000 க்கும் அதிகமாக உள்ளன. 5,000 தெருநாய்களை தங்க வைப்பதற்கு மட்டுமே இடங்கள் சாத்தியமாக உள்ளன. இது, நகரத்தின் தெருநாய் எண்ணிக்கையில் 10% மட்டுமே.
கால்நடை பராமரிப்புத் துறையின் அறிக்கையின்படி இந்தியாவில் தெருநாய்கள் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ளது. தெருக்களில் சுமார் 1.53 கோடி நாய்கள் சுற்றி திரிகிறது. இந்த எண்ணிக்கையானது இந்தியாவின் மக்கள்தொகையில் சுமார் 1% ஆகும்.
அதிக எண்ணிக்கையிலான தெருநாய்களைக் கொண்ட முதல் ஐந்து மாநிலங்களில் உத்தரப் பிரதேசத்தில் 2,059,261 நாய்கள் உள்ளன. அதைத் தொடர்ந்து ஒடிசாவில் 1,734,399 நாய்கள், மகாராஷ்டிராவில் 1,276,399 நாய்கள், ராஜஸ்தானில் 1,275,596 நாய்கள், கர்நாடகாவில் 1,141,173 நாய்கள் உள்ளன.
மேலும், பெங்களூருவில் 1,36,866 நாய்களும், டெல்லியில் 55,462 நாய்களும், மும்பையில் 50,799 நாய்களும், சென்னையில் 24,827 நாய்களும், கொல்கத்தாவில் 21,146 நாய்களும், ஹைதராபாத்தில் 10,553 நாய்களும் உள்ளன.
இந்தியாவில் 2022 முதல் 2024-ம் ஆண்டு வரையில் 8,958,143 நாய்க்கடிகள் பதிவாகியுள்ளன. மகாராஷ்டிராவில் 13.5 லட்சம் நாய்க்கடிகளும், தமிழ்நாட்டில் 12.8 லட்சம் நாய்க்கடிகளும் மற்றும் குஜராத்தில் 8.4 லட்சம் நாய்க்கடிகளும் பதிவாகியுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |