இந்தியாவின் வரி இல்லாத மாநிலம் எது தெரியுமா? 1ரூபாய் கூட கொடுக்க வேண்டாம்
கோடிக்கணக்கில் ஒருவர் பணம் சம்பாதித்தாலும் இந்த மாநிலத்தில் இருப்பவர்களிடம் இருந்து அரசு ஒரு ரூபாயை கூட வரி வசூலிப்பதில்லை.
Tax Free State
இந்தியனாக பிறந்த ஒவ்வொரு குடிமகனும் தங்களது வருமானத்தின் அடிப்படையில் அரசிற்கு வரி செலுத்துதல் வேண்டும். தற்போது இந்திய மக்கள் பலரும் வருமான வரி அறிக்கையை (ITR) தாக்கல் செய்து வருகின்றனர்.
ஆனால், இந்திய மாநிலம் ஒன்றில் உள்ள மக்கள் மட்டும் எவ்வளவு ரூபாய் சம்பாதித்தாலும் வருமான வரி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டிய அவசியமில்லை. அது எந்த மாநிலம் என்றால் சிக்கிம் தான்.
இந்தியா 1947-ம் ஆண்டில் சுதந்திரம் அடைந்த போது சிக்கிம் இந்தியாவின் மாநிலமாக அல்லாமல் சோக்யால் வம்சத்தால் ஆளப்பட்ட நாடாக இருந்தது. அப்போது சிக்கிமின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவு விவகாரங்களை மட்டும் இந்திய அரசு கவனித்துக் கொண்டது.
இதையடுத்து 1975-ம் ஆண்டில் மக்கள் வாக்கெடுப்பிற்கு பிறகு இந்தியாவுடன் சிக்கிம் இணைக்கப்பட்டது. அதன்படி தான், இந்தியாவின் 22வது மாநிலமாக சிக்கிம் மாறியது.
ஆனால், சிறப்பு நிபந்தனைகளுடன் தான் சிக்கிம் இணைக்கப்பட்டது. அதாவது, சிக்கிம் மக்களின் சிறப்பு அந்தஸ்தையும் அடையாளத்தையும் பராமரிக்க இந்திய அரசியலமைப்பில் சிறப்பு விதிகள் இணைக்கப்பட்டன.
இந்த சிறப்பு விதிகளில் சிக்கிமின் பழைய சட்டங்களுக்குப் பாதுகாப்பை வழங்குவது மற்றும் அவர்களின் சிறப்பு உரிமைகளை பறிக்காமல் இருப்பது ஆகியவை அடங்கும்.
மேலும், 1961 ஆம் ஆண்டு இந்திய வருமான வரிச் சட்டத்தில் 10(26AAA) என்ற சிறப்புப் பிரிவும் சேர்க்கப்பட்டது. இதன் படி சிக்கிம் மக்கள் தங்களது வருமானத்திற்கு வருமான வரி செலுத்த வேண்டியதில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |