வெள்ளையினப் பெண்ணாக பிறந்து ஊசி போட்டு தன்னை கருப்பாக மாற்றிக்கொண்ட நடிகை
வெள்ளையினப் பெண்ணாகப் பிறந்த ஒரு பெண், தனக்கும் ஆப்பிரிக்காவுக்கும் ஏதோ பூர்வ ஜென்மத் தொடர்பு இருப்பதாகக் கூறி ஊசி மருந்துகள் மூலம் தன்னை கருப்பாக்கிக்கொண்டுள்ளார்.
தன்னை கருப்பாக மாற்றிக்கொண்ட நடிகை
ஜேர்மன் மொடலும் நடிகையுமான மார்ட்டினா பிக் ( Martina Big, 36), வெள்ளையினப் பெண்ணாகப் பிறந்தவர்.
தனது தோலின் நிறம், புருவத்தின் நிறம் மற்றும் கண்களின் நிறத்தை கருப்பாக மாற்றுவதற்காக மெலானின் ஊசி போட்டுக்கொள்வது முதலான பல சிகிச்சைகளுக்கு உட்பட்டுள்ளார் மார்ட்டினா.
கருப்பினத்தவர்களைப் போலவே தன் தோற்றத்தை மாற்றிக்கொள்வதற்காக உதட்டில் பல அறுவை சிகிச்சைகளை செய்துகொண்டுள்ள மார்ட்டினா, அடுத்ததாக தனது மூக்கையும் பின்பக்கங்களையும் அறுவை சிகிச்சை மூலம் ஆப்பிரிக்க நாட்டவர்களைப்போல மாற்றிக்கொள்ள இருக்கிறார்.
மார்ட்டினா என்னும் தனது பெயரையும் மலைக்கா குப்வா (Malaika Kubwa) என்று மாற்றிக்கொண்டுள்ளதுடன், ஆப்பிரிக்காவுக்கே சென்று வாழ்வும் முடிவு செய்துள்ளார் மார்ட்டினா எனும் மலைக்கா.
என்றாலும், சிலர் மார்ட்டினா கருப்புச் சாயன் பூசிக்கொண்டுள்ளதாக விமர்சிப்பதுடன், ஒரு நாளும் அவர் கருப்பினத்தவராக ஆகமுடியாது என்றும் கூறிவருகின்றனர்.
மார்ட்டினா ஒரு மொடலும் நடிகையும் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |