அமெரிக்காவிற்கு எதிராக சீன இராணுவத்தைத் தூண்டி விடும் அலிபாபா: கசிந்த ரகசியம்
அமெரிக்காவை குறிவைக்கும் பொருட்டு சீன இராணுவத்தை அலிபாபா நிறுவனம் தூண்டி விடுவதாக மிக ரகசியமான உளவுத்துறை தகவல் ஒன்று கசிந்துள்ளது.
அலிபாபா நிறுவனம்
இது தொடர்பான ஆவணம் ஒன்றை பைனான்சியல் டைம்ஸ் பகிர்ந்துள்ளது. அதில், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என்று அமெரிக்க அதிகாரிகள் நம்பும் தொழில்நுட்பம் மற்றும் தரவுகளை அலிபாபா நிறுவனம் எவ்வாறு சீன இராணுவத்திற்கு வழங்குகிறது என்பது விளக்கப்பட்டுள்ளது.

வெள்ளை மாளிகை நிர்வாகத்திடம் உள்ள தரவுகளில், அலிபாபா நிறுவனம் சீன இராணுவத்திற்கு பல்வேறு AI தொடர்பான சேவைகளையும் வாடிக்கையாளர் தகவல்களை அணுகுவதையும் வழங்குவதாகக் கூறப்படுகிறது.
அதாவது அமெரிக்க மக்களின் IP முகவரிகள், WiFi விவரங்கள் மற்றும் கட்டண பதிவுகள் உள்ளிட்டவையும் அதில் அடங்கும் என்றே கூறப்படுகிறது. ஆனால் அலிபாபா நிறுவனம் இந்த குற்றச்சாட்டுகளை மொத்தமாக மறுத்துள்ளது.
அத்துடன் உளவுத்துறை குறிப்பிட்டுள்ள அனைத்தும் வெறும் கட்டுக்கதை என்றும் பதிலளித்துள்ளது. மேலும் அலிபாபா நிறுவனத்திற்கு எதிராக அமெரிக்க வாடிக்கையாளர்களை ஒன்று திரட்டும் செயல் என்றும் குற்றஞ்சாட்டியுள்ளது.

எதுவும் சாத்தியம்
தென் கொரியாவில் ட்ரம்பும் சீன ஜனாதிபதியும் சந்தித்துக் கொண்டதன் பின்னரே, அலிபாபா தொடர்பான குற்றச்சாட்டு வெளியாகியுள்ளது. சீன இராணுவம் அமெரிக்காவில் எதை இலக்கு வைத்துள்ளது என்பதை அமெரிக்க அதிகாரிகள் விளக்கமளிக்கவில்லை.
ஆனால், சீனாவால் அமெரிக்காவின் உள்கட்டமைப்புகளை செயலிழக்க செய்ய முடியும் என்றே தேசிய புலனாய்வு இயக்குநரின் அலுவலகம் எச்சரித்துள்ளது.

Salt Typhoon என அடையாளப்படுத்தப்பட்ட, கடந்த மார்ச் மாதம் நடந்த சீனாவின் சைபர் தாக்குதலைக் குறிப்பிட்டு, சீனாவால் எதுவும் சாத்தியம் என தெரிவித்துள்ளனர்.
அலிபாபா ஊடாக சீனாவின் இந்த நெருக்கடியை எதிர்கொள்ள நடவடிக்கை எடுத்து வருவதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெள்ளை மாளிகையின் இந்த குறிப்பை சீனா தூதரகமும் வெறும் கட்டுக்கதை என புறந்தள்ளியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |