வெள்ளை மாளிகை அருகே பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு: ஒருவர் படுகாயம்
வெள்ளை மாளிகை அருகே ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை கட்டுப்படுத்த பாதுகாப்பு அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு
திங்கட்கிழமை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் இல்லமான வெள்ளை மாளிகை அருகே ஏற்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தலை அடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இந்த தகவலை அமெரிக்க ரகசிய சேவை அலுவலகம் அதிகாரப்பூர்வமாக அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த மோதல் சம்பவமானது 15-வது வீதி மற்றும் இண்டிபென்டன்ஸ் அவென்யூ சந்திப்பு அருகே நடந்துள்ளது.

பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் சுடப்பட்ட நபரின் தற்போதைய உடல்நிலை நிலவரம் குறித்து எந்தவொரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
மேலும் துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் மற்றும் பின்னணி குறித்தும் இதுவரை எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |