வெள்ளை மாளிகையில் துப்பாக்கிச்சூடு: ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விளக்கம்
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடந்த துப்பாக்கிச் சூடு தாக்குதல் குறித்து ஜனாதிபதி டிரம்ப் விளக்கமளித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் துப்பாக்கிச் சூடு
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பங்கேற்ற நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
துப்பாக்கிச் சூடு தாக்குதலை தொடர்ந்து பாதுகாப்பு அதிகாரிகள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், துணை ஜனாதிபதி ஜே.டி வான்ஸ் ஆகியோர் பாதுகாப்பாக வெளியேற்றி அழைத்து சென்றனர்.
Service agents evacuated President Trump from his table at the White House Correspondents’ Association dinner. Cabinet secretaries also left the ballroom, according to witnesses.
— The Washington Post (@washingtonpost) April 26, 2026
Live updates: https://t.co/22omcZ4dn6 pic.twitter.com/fjoWMRHxHL
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கான இரவு விருந்து நிகழ்ச்சியில் மர்ம நபர்கள் புகுந்து இந்த துப்பாக்கிச் சூடு தாக்குதலை நடத்தியுள்ளனர்.
துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்திய நபரை பாதுகாப்பு அதிகாரிகள் சுட்டுக் கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
டிரம்ப் விளக்கம்
இந்நிலையில் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு தாக்குதல் குறித்து ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விளக்கமளித்துள்ளார்.
BREAKING: President Trump says he “fought like hell” to stay at the White House Correspondents’ Dinner after the shooting. pic.twitter.com/E7zsTqeND4
— Fox News (@FoxNews) April 26, 2026
அதில், துப்பாக்கிச்சூடு தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தாக்குதல்தாரியை அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
ரகசிய பாதுகாப்பு அதிகாரிகளால் நாங்கள் விரைவாகவும் பாதுகாப்பாகவும் வெளியேற்றப்பட்டதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிச்சூடு தாக்குதலின் போது பாதுகாப்பு அதிகாரிகள் துணிச்சலுடன் செயல்பட்டதாக டிரம்ப் பாராட்டியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |