முன்னணி ஊடகங்களுடன் மோதல்; ட்ரம்ப் டிவியை தொடங்கிய வெள்ளை மாளிகை
white house launches trump tv after clash with medias: முன்னணி ஊடங்களுடன் ஏற்பட்டுள்ள மோதலுக்கு பின்னர், வெள்ளை மாளிகை ட்ரம்ப் டிவியை தொடங்கியுள்ளது.
முன்னணி ஊடங்களுடன் ட்ரம்ப் மோதல்
அமெரிக்காவின் பிரபலமான 3 செய்தி ஊடங்களான CNN, MS NOW, மற்றும் Politico ஆகியவை வெள்ளை மாளிகைக்குள் நுழைய ட்ரம்ப் நிர்வாகம் தடை விதித்துள்ளது.

இந்த தடை, தவறான, போலி மற்றும் திசைதிருப்பும் செய்திகளை பரப்பும் நிறுவனங்களுக்கு எதிரானது மட்டுமே, பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிரானது இல்லை. எப்போதும் எனக்கு எதிர்மறையான செய்திகளையே வெளியிடுகின்றன. இது நாட்டின் பாதுகாப்பிற்கே ஆபத்தானவை என ட்ரம்ப் விளக்கமளித்துள்ளார்.
ட்ரம்ப் நிர்வாகம் விதித்துள்ள இந்த தடையை எதிர்க்காவிட்டால் பத்திரிகை சுதந்திரம் மற்றும் அரசாங்க தலையீடு இல்லாத தன்னிச்சையான பத்திரிகைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்படும் என குறிப்பிட்டுள்ள 3 செய்தி நிறுவனங்களும் இந்த தடைக்கு எதிராக வழக்கு தொடரப்போவதாக அறிவித்துள்ளன.
இந்த 3 செய்தி நிறுவனங்களுக்கு ஆதரவாக அமெரிக்காவின் மற்ற முன்னணி செய்தி நிறுவனங்களான ABC, CBS, CNN, Fox, NBC ஆகியவை வெள்ளைமாளிகை செய்திகளை ஒளிபரப்ப போவதில்லை என அறிவித்துள்ளன.

ட்ரம்ப் டிவி தொடக்கம்
இதனைத்தொடர்ந்து TRUMP TV: The Essentials Station’ என்ற பெயரில் 24 மணி நேரமும் இயங்கும் செய்தி சேனலை தொடங்குவதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
Launched.
— The White House (@WhiteHouse) September 22, 2026
All the top hits, wins, + more. Streaming 24/7 on your phone or tv.
📺 https://t.co/3KwWkBZ69m pic.twitter.com/oIPfUA0Np9
வெள்ளை மாளிகையின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கங்கள் மற்றும் யூடியூப் தளத்தில் இச்சேவை தொடங்கப்பட்டுள்ளது.
ட்ரம்ப் டிவியில், நிர்வாக அறிவிப்புகள், ஜனாதிபதியின் உரைகள் மற்றும் பிற உள்ளடக்கங்கள் இடம்பெறும்.