AIயின் பிழையான அறிக்கையால் சீனா, அமெரிக்கா இடையே ஏற்பட இருந்த மோதல்

United States of America China Artificial Intelligence
By Karthikraja Sep 19, 2026 09:29 AM GMT
Report

false ai report leads almost war between china and us: AIயின் பிழையான அறிக்கையால், சீனா மற்றும் அமெரிக்கா இடையே மோதல் ஏற்பட இருந்த சம்பவம் தற்போது தெரிய வந்துள்ளது.

AIயின் பிழையான அறிக்கை

செயற்கை நுண்ணறிவின் தாக்கம், நாளுக்கு நாள் அனைத்து துறைகளிலும் அதிகரித்து வருகிறது. ஆனால், செயற்கை நுண்ணறிவு முழுமையாக நம்பகத்தன்மை உடையது இல்லை என நிபுணர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.

நிபுணர்களின் கூற்றுப்படியே, செயற்கை நுண்ணறிவு அவ்வப்போது பிழையான தகவல்களை வழங்கி வருகிறது.  

AIயின் பிழையான அறிக்கையால் சீனா, அமெரிக்கா இடையே ஏற்பட இருந்த மோதல் | False Ai Report Lead Almost War Between China Us

அவ்வாறாக AI வழங்கிய பிழையான அறிக்கை ஒன்று, அமெரிக்கா மற்றும் சீனா இடையே மோதல் ஏற்படும் வாய்ப்பை உருவாக்கியிருந்தது.

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் நடைபெற்று வந்த சூழலில், மத்திய கிழக்கு கடல் பகுதியிலிருந்து சீன கப்பல் ஒன்று அணு ஆயுதத் திட்டதிற்கான பொருட்களை ஏற்றிக் கொண்டு செல்வதாக அமெரிக்கா ராணுவத்திற்கு உளவு தகவல் அறிக்கை கிடைத்துள்ளது. 

3 வாரத்தில் யூடியூப் விளம்பரத்தில் ரூ.1.1 கோடி செலவு செய்த 9 வயது சிறுவன்

3 வாரத்தில் யூடியூப் விளம்பரத்தில் ரூ.1.1 கோடி செலவு செய்த 9 வயது சிறுவன்

சீனா, அமெரிக்கா இடையே ஏற்பட இருந்த மோதல்

இதனையடுத்து, ஆயுதங்களுடன் இருந்த அமெரிக்க ராணுவ வீரர்கள் கப்பலில் ஏற தயாராக இருந்தனர். அதே போல், அமெரிக்கா ராணுவ விமானங்களும் வானில் வட்டமிட தொடங்கியது. 

AIயின் பிழையான அறிக்கையால் சீனா, அமெரிக்கா இடையே ஏற்பட இருந்த மோதல் | False Ai Report Lead Almost War Between China Us

இதனிடையே ராணுவ அதிகாரிகள் அந்த அறிக்கையை ஆய்வு செய்ததில், அது AI மூலம் தயாரிக்கப்பட்டது தெரிய வந்தது.

ஹவாயில் அமைந்துள்ள அமெரிக்க பசிபிக் சிறப்பு நடவடிக்கைக் கட்டளை மையத்திலிருந்து பெறப்பட்ட, கப்பலின் பயணிகளின் பட்டியல் குறித்த உளவுத் தகவல்களை ஆய்வாளர் ஆய்வு செய்தபோது இந்தச் சம்பவம் தொடங்கியது.

அந்த ஆய்வாளர் பயன்படுத்திய AI மென்பொருள், கப்பல் கொண்டு சென்ற பொருளைத் தவறாக அடையாளம் கண்டதை அதிகாரிகள் உறுதிசெய்ததை அடுத்து, அந்த நடவடிக்கை கைவிடப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து விவரித்த அமெரிக்கா ராணுவ அதிகாரிகள், "அந்த உளவுத்துறை அறிக்கை முற்றிலும் பொய்யானது ஆனால் கிட்டத்தட்ட ஒரு போரைத் தொடங்கிவிட்டது" என தெரிவித்துள்ளனர். 

அமெரிக்கத் தேர்தலில் தலையிட புதிய AI ஆயுதத்தை பயன்படுத்த ரஷ்யா திட்டம்

அமெரிக்கத் தேர்தலில் தலையிட புதிய AI ஆயுதத்தை பயன்படுத்த ரஷ்யா திட்டம்

அந்தக் கப்பல் உண்மையில் எதை ஏற்றிச் சென்றது, எங்கு சென்றுகொண்டிருந்தது என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை.

AI தொழில்நுட்பம் மனித கட்டுப்பாட்டிலிருந்து தப்பிக்கக்கூடும், AI இன்னும் சில ஆண்டுகளில் மனித குலத்தையே அழித்து விட வாய்ப்புள்ளதாக Open AI மற்றும் Anthropic ஆகிய முன்னணி AI நிறுவனங்களில் பணியாற்றிய ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்த பின்னர் தங்களது பணியை ராஜினாமா செய்த நிலையில், இந்த தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், செயற்கை நுண்ணறிவு துறையின் வளர்ச்சியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அனைத்தும் இந்த துறைக்கு எதிரான ஒரு அபத்தமான சதி என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US