3 வாரத்தில் யூடியூப் விளம்பரத்தில் ரூ.1.1 கோடி செலவு செய்த 9 வயது சிறுவன்
9 வயது சிறுவன் 3 வாரங்களில் யூடியூப் விளம்பரத்தில் ரூ.1.1 கோடி செலவு செய்துள்ளது அவரின் தந்தைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
யூடியூப் விளம்பரத்தில் ரூ.1.1 கோடி செலவு செய்த 9 வயது சிறுவன்
Mike என்ற 9 வயது சிறுவன் மைன்கிராஃப்ட் மற்றும் ராப்லாக்ஸ் விளையாட்டுகளை விளையாடுவதில் ஆர்வம் கொண்டவர்.
யூடியூபில் அந்த விளையாட்டுகளை பார்க்கும் போது, அவருக்கும் தனது விளையாட்டுகளை யூடியூபில் பதிவேற்ற ஆசை வந்துள்ளது.

இது பற்றி அவரது தந்தை டேவ்விடம் தெரிவிக்க, அவரும் Mighty Mike Play என்ற பெயரில் யூடியூப் சேனலை தொடங்கி, மகன் விளையாடும் வீடியோக்களை பதிவேற்றினார்.
ஆனால் அந்த வீடியோக்கள் போதிய பார்வைகளை பெறாததால் மகன் ஏமாற்றமடைந்த நிலையில், தனது நிறுவன கிரெடிட் கார்டை பயன்படுத்தி, 20 டொலர் செலுத்தி ஒரு வீடியோவிற்கு சிறிய விளம்பரப் பிரச்சாரத்தை நடத்தியுள்ளார்.
ஆனால், அதன் பிறகு தனது கிரெடிட் கார்டுக்கான அணுகலை நீக்க மறந்து விட்டார்.
3 வாரங்கள் கழித்து, அவரது நிறுவன மேலாளர்கள், நிறுவனப் பணியாளர்கள் மற்றும் நிதிக் குழுவினர் தனக்காகக் காத்திருந்த ஓர் அறைக்கு அழைக்கப்பட்ட பின்னரே அவருக்கு விடயத்தின் தீவிரம் புரிந்தது.
3 வாரங்களில் அவரது கிரெடிட் கார்டில் இருந்து தோராயமாக 1,18,000 டொலர்(இந்திய மதிப்பில் ரூ.1.13 கோடி) வீடியோ கேமை விளம்பரப்படுத்த யூடியூபில் செலவிடப்பட்டிருந்தது குறித்து விளக்குமாறு அவரிடம் கேட்டுள்ளனர்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், தனது மகன் அந்த கிரெடிட் அட்டையை பயன்படுத்தி அதில் உள்ள எண்கள் பணம் என்பது கூட தெரியாமல் செலவிட்டது தெரியவந்துள்ளது.
தனது மகன் செய்ததை எண்ணி புலம்பி ஒரு வீடியோ வெளியிட்டுள்ள டேவ், தனது சேனலை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவெடுத்துள்ளார்.
அதைத் திருப்பிச் செலுத்தும்படி கேட்கப்படுவாரா அல்லது தனது வேலை தொடருமா என்பது அவருக்கு இன்னும் தெரியவில்லை.