வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் துப்பாக்கிச் சூடு: மர்ம நபரை சுட்டு வீழ்த்திய அதிகாரிகள்
அமெரிக்க வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்திய மர்ம நபர் பாதுகாப்பு அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
வெள்ளை மாளிகையில் துப்பாக்கிச் சூடு
சனிக்கிழமை மாலை அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை அருகே மர்ம நபர் ஒருவரால் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளை மாளிகையின் பாதுகாப்பு சாவடிக்கு அருகே அந்த மர்ம நபர் துப்பாக்கி சூட்டை தொடங்கிய பிறகு, பாதுகாப்பு படையினரால் அந்த மர்ம நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
துப்பாக்கிச் சூடு காயங்களுடன் பிடிபட்ட சந்தேக நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பின்னர் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
இந்த சம்பவத்தின் போது வெள்ளை மாளிகை அருகில் இருந்த பொதுமக்கள் யாருக்கும் எந்தவொரு காயமும் ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் அதிர்ஷ்டவசமாக மோதலில் ஈடுபட்ட பாதுகாப்பு படையினருக்கும் எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் போது ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் இருந்தார் என்றும், இருப்பினும் அவரின் உயிருக்கு எந்தவொரு ஆபத்தும் ஏற்படவில்லை என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |