தமிழ்நாடு அரசுக்கு ரூ.13.18 லட்சம் கோடி கடன் - வெளியான வெள்ளை அறிக்கை
தமிழ்நாடு நிதி அமைச்சர் மரிய வில்சன் தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டு வருகிறார்.
தமிழ்நாடு அரசுக்கு ரூ.13.18 லட்சம் கோடி கடன்
இதில் பேசிய அவர், "5 ஆண்டுகளில் தமிழகத்தின் கடன் ரூ.5 லட்சத்தில் கோடியில் ரூ.10 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.
60 வருடத்தில் தமிழ்நாடு அரசு வாங்கிய கடனை விட, கடந்த 5 ஆண்டுகளில் திமுக அரசு அதிகம் கடன் வாங்கியுள்ளது.

தமிழகத்தின் உண்மையான கடன் அளவு ரூ13.18 லட்சம் கோடியாக உள்ளது.
தமிழகத்தின் நிலுவைக் கடன் சதவீதம் குறைந்துள்ளது. மாநில ஜிடிபி 28.7% ல் இருந்து 28.3% ஆக குறைந்துள்ளது.
வருவாய் பற்றாக்குறை 2.25 சதவீதத்தில் இருந்து 2.22 சதவீதமாக குறைந்துள்ளது.
கொரோனா தொற்று காலத்தை விட திமுக ஆட்சியில் வருவாய் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. தமிழ்நாட்டின் வருவாய் பற்றாக்குறை ரூ.78,324 கோடியாக உள்ளது.
தமிழ்நாட்டின் மொத்த வருவாய் வரவில் 22.8 சதவீதம் வட்டிக்காகவே செலவாகி வருகிறது. வட்டி மட்டும் ஆண்டுக்கு ரூ.67,000 கோடி செலுத்தப்படுகிறது.
தமிழ்நாட்டின் தனிநபர் கடன் ரூ.1.28 லட்சமாக உள்ளது" என தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |