வெள்ளையர்கள் யாராவது குறுக்கே வந்தால் சுட்டுவிடவேண்டும் என ஆசைப்பட்டிருக்கிறேன்... அமெரிக்க மன நல மருத்துவரின் உரையால் சர்ச்சை
வெள்ளையர்களின் மன நிலைமை குறித்து மாணவர்களுக்கு ஒரு உரையற்றுவதற்காக அழைக்கப்பட்டார் மன நல மருத்துவர் ஒருவர். அதன்படி, யேல் பல்கலைக்கழக மருத்துவ மாணவர்களுக்கு உரையாற்றினார் Dr Aruna Khilanani என்னும் அந்த மன நல மருத்துவர். ஆனால், அவரது உரை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தனது உரையின்போது, குறுக்கே வெள்ளையர்கள் யாராவது வந்தால், அவர்கள் தலையில் துப்பாக்கியால் சுட்டுவிடுவது போல கற்பனை செய்து மகிழ்ந்திருக்கிறேன் என்று கூறிய Dr Aruna, அந்த நபரை மண்ணில் புதைத்துவிட்டு, எந்த குற்ற உணர்ச்சியுமே இல்லாததுபோல துள்ளிக்குதித்து ஓடவேண்டும் போல இருக்கிறது என்றார்.
கருப்பினத்தவர்கள் முதலானோர் இனவெறி குறித்து பேசினால், வெள்ளையர்களுக்கு தங்களை வம்புக்கிழுப்பது போல இருக்கும் என்று கூறிய Dr Aruna, இது அவர்களது மன நிலை என்றார்.
அவர்கள் செய்த எல்லாவற்றிற்காகவும் வெள்ளையர்கள் நன்றியை எதிர்பார்ப்பார்கள், அவர்கள் குழப்பவாதிகள், நாமும் அப்படித்தான் என்று கூறிய Dr Aruna, இனவெறுப்பு குறித்து நேரடியாக வெள்ளையர்களிடம் பேசுவதில் பயன் எதுவும் இல்லை என்றார்.
வெள்ளையர்கள் புத்தியில்லாமல் நடந்துகொள்பவர்கள் என்றும், அவர்களை நினைத்தால் தன் இரத்தம் கொதிப்பதாகவும் தெரிவித்தார் அவர்.
இப்படி Dr Aruna சரவெடியாக வெள்ளையர்களைக் குறித்து வெளுத்து வாங்க, அவரது உரை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. யேல் பல்கலைக்கழகமே, எச்சரிக்கை கொடுத்துவிட்டுத்தான் அவரது உரையை வெளியிட்டுள்ளது, அதுவும் யேல் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மட்டுமே அந்த உரை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.