இந்தியாவின் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிக்கு சர்வதேச அங்கீகாரம் அளித்த WHO
இந்தியா மற்றும் தென் கொரியா தயாரித்த ஆக்ஸ்ஃபோர்டு-அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிகளை உலகம் முழுவதும் அவசரகால தடுப்பூசியாக பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம் அளித்துள்ளது.
தென் கொரியாவின் AstraZeneca-SKBio நிறுவனம் தயாரிக்கும் தடுப்பூசி மற்றும் Serum Institute of India தயாரிக்கும் Covishield ஆகிய இரண்டு தடுப்பூசிகளுக்கு சர்வதேச அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் Covax facility திட்டத்தின்படி அனைத்து ஏழை நாடுகளுக்கு தடுப்பூசி கிடைக்கவேண்டும் என்பதற்காக இந்த இரண்டு தடுப்பூசிகளுக்கு கூடுதலாக அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
ChAdOx1-S என அழைக்கப்படும் இந்த தடுப்பூசிகள் 63.09% செயல்திறனைக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இவை எளிதான சேமிப்பு முறை காரணமாக குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளுக்கு ஏற்றதாக பரிந்துரைக்கப்படுகிறது.
இந்த தடுப்பூசிகள் பிப்ரவரி 8-ஆம் திகதி WHOவின் நோய்த்தடுப்பு தொடர்பான நிபுணர்களின் ஆலோசனைக் குழு (SAGE) மதிப்பாய்வு செய்த பிறகு, பயன்படுத்துவதற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளன. 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து வயதினருக்கும் இந்தத் தடுப்பூசிகள் SAGE பரிந்துரைத்தது.