பிரித்தானியா போன்ற நாடுகளில் மக்களுக்கு போடப்பட்டு வரும் கொரோனா தடுப்பூசி எப்படி பயன்படுத்த வேண்டும்? WHO விளக்கம்
பிரித்தானியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் அனுமதியளிக்கப்பட்ட பைஸர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பு மருந்தை அவசரகாலத்துக்கு பயன்படுத்திக்கொள்ள உலக சுகாதார அமைப்பு அனுமதியளித்துள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும், குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாக பரவி வருகிறது.
இந்த வைரஸை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் சமீபத்தில், பிரித்தானியாவில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு ஊரடங்கு கடுமையாக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், பைஸர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பு மருந்துகளை மக்களுக்குச் செலுத்த ஐரோப்பிய நாடுகளும், பிரித்தானியாவும், அமெரிக்காவும் அனுமதியளித்துவிட்டன. மக்களுக்கு இந்த பைஸர் தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், உலக சுகாதார அமைப்பு நேற்று வெளியி்ட்ட அறிக்கையில், பைஸர் பயோஎன்டெக் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகளை அவசரகாலத்துக்கு பயன்படுத்த அனுமதி அளித்துள்ளோம்.
சுயமாக மருந்து தரக்கட்டுப்பாடு அமைப்பு வைத்திருக்கும் நாடுகள் பைஸர் நிறுவனத்தின் மருந்துகளை ஆய்வு செய்து, இறக்குமதி செய்து பயன்படுத்தலாம். மக்களுக்குச் செலுத்தலாம்.
பைஸர்-பயோஎன்டெக் நிறுவனம் தயாரிக்கும் கொரோனா தடுப்பு மருந்துகளுக்கு ஏற்கெனவே அமெரிக்கா, பிரித்தானியா, பல ஐரோப்பிய நாடுகள் அனுமதியளித்துள்ளன.
அங்குள்ள மக்களுக்கு இந்த பைஸர் தடுப்பூசி மருந்துகள் செலுத்தப்பட்டு வருகின்றன. உலக சுகாதார அமைப்பு நிர்ணயித்திருந்த பாதுகாப்பு மற்றும் திறன்களை அந்த மருந்து பெற்றுள்ளது.
பைஸர் தடுப்பு மருந்துகளை மைனஸ் டிகிரிக்கும் அதிகமான உறை குளரில் சேமித்து வைக்க வேண்டும் என்பதால், வளர்ந்துவரும் நாடுகளுக்கு இந்த மருந்துகளை சேமித்துவைப்பதும், தேவையான மின்சாரம் வழங்குவதும் சவாலாக அமையும். இந்த சேமிப்பு வசதிகள் இருக்கும் நாடுகளி்ல் இருந்து மருந்துகளை ஏழை நாடுகளுக்கு அனுப்பத் தேவையான உதவிகளும் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.