இந்திய பணத்தில் மகாத்மா காந்திக்கு முன்னர் யார் இருந்தது தெரியுமா?
இந்தியாவின் பணத்தில் மகாத்மா காந்திக்கு முன்னாள் யாருடைய படம் இருந்தது தெரியுமா? அது குறித்து விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.
மகாத்மா காந்திக்கு முன்னாள் யார்?
உலகம் முழுவதிலும் அனைத்து பரிவர்த்தனைகளுக்கு பணமானது முக்கியமாக கருதப்படுகிறது. ஒவ்வொரு பணமும் அந்தந்த நாட்டின் தனித்தன்மையை பிரதிபலிக்கும்.
குறிப்பாக கூற வேண்டுமென்றால், நாட்டின் முக்கிய தலைவர்கள் மற்றும் பிரமுகர்களின் உருவப்படமானது பணத்தில் பொறிக்கப்பட்டிருக்கும்.
அந்தவகையில் இந்தியாவின் பணத்தை பொறுத்தளவில் 50 ஆண்டுகளுக்கு மேலாக மகாத்மா காந்தியின் உருவப்படமே காணப்படுகிறது.
இவருக்கு முதல் இந்தியாவின் பல முக்கிய தலைவர்களின் உருப்படமானது பணத்தில் காணப்பட்டிருந்தது.
- 1917 ஆம் ஆண்டு நவம்பர் 30 திகதிகளில் ஒரு ரூபாய் தாளில் ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் புகைப்படத்துடன் அச்சிடப்பட்டு வந்தது. அது ஆங்கிலேயர்களின் ஆட்சக் காலமாக இருந்தது.
- ஆங்கிலேர்களிடம் இருந்து விடுதலை பெற்ற பின்னர், அசோகர் தூணுடன் கூடிய பணத்தாள்கள் அச்சிடப்பட்டன.
- 1917 - 1918 ஆம் காலக்கட்டத்தில் ஹைதராபாத் நிஜாம் போன்ற சமஸ்தானங்கள் நாணயத்தை அச்சிடும் உரிமையை பெற்றன. அதன் போது கட்ச் மற்றும் மோர்வி மாநிலமும் தங்களது நாணயத்தை சொந்தமாக வெளியிட்டன. அவர்களின் சமஸ்தானங்களையே நாணயங்களில் அச்சிட்டிருந்தனர்.
- 1510 ஆம் ஆண்டு இந்தியாவின் மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள கோவா பகுதி போர்த்துக்கேயரின் ஆட்சி காலமாக இருந்தது. அதன் போது போர்த்துகீசிய எஸ்குடோ நாணயம் தான் வெளியிடப்பட்டன.
- கடந்த 1961 வரை கோவாவில் எஸ்குடோ நாணயம் புழக்கத்தில் இருந்தது. அந்த நாணயத்தில் இரண்டாம் ஜான் மன்னரின் புகைப்படம் அச்சிடப்பட்டன.
- 1954 வரை பிரான்ஸ் நாட்டின் காலனியாக புதுச்சேரி இருந்தது. அதன் போது பிரான்ஸ் நாட்டின் அரசர்களின் படமானது அச்சிடப்பட்டு இருந்தன.
- 1962 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16 ஆம் திகதி புதுசேரி விடுவிக்கப்பட்டு, 1964 ஆண்டிற்கு பிறகு இந்திய பணத்தின் புழக்கம் ஆரம்பிக்கப்பட்டது.
- இறுதியாக 1996 ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரையில் இந்திய பணமானது மகாத்மா காந்தியின் புகைப்படத்துடன் அச்சிடப்பட்டு வருகின்றன.
இந்திய பணத்தில் அச்சிடப்பட்டுள்ள காந்தியின் படமானது, 1946ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசியல்வாதி பிரடெரிக் வில்லியம் பெதிக் லாரன்ஸ் என்பவருடன் இருந்தபோது எடுக்கப்பட்டதாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |