நடுக்கடலில் ஈரான் கப்பல் மீது தாக்குதல் நடத்தியது யார்? முன்னரே உஷாரான அமெரிக்கா: இரு நாடுகளுக்கு இடையே அதிகரிக்கும் பதற்றம்
ஈரான் சரக்கு கப்பல் மீது தாக்குதுல் நடத்தியது குறித்து இஸ்ரேல் அமெரிக்காவுக்கு தகவல் தெரிவித்ததாக அமெரிக்க அதிகாரியை மேற்கோள் காட்டி நியூ யார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
சிவப்பு கடலில் ஈரானின் சரக்கு கப்பலான Saviz மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.
Saviz கப்பல் கண்ணி வெடி அல்லது ஏவுகணையால் தாக்கப்பட்டதாகவும், இதில் அதன் அடிப்பகுதி சேதமடைந்ததாக செய்திகள் வெளியானது.
ஈரான் தங்கள் கப்பல் மீது நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்தியதாக அமெரிக்க அதிகாரி கூறியுள்ளார்.
மேலும், அந்த கடல் பகுதியில் இருந்த அமெரிக்க விமானம் தாங்கி கப்பலான the Dwight D. Eisenhower, Saviz-லிருந்து தன்னைத் தூர விலக்கிக்கொள்ளும் வகையில் இஸ்ரேல் தாக்குதலை தாமதமாக்கியதாக அவர் கூறினார்.
Saviz தாக்கப்பட்ட தருணத்தில், Eisenhower சுமார் 200 மைல் தொலைவில் இருந்ததாக அதிகாரி குறிப்பிட்டார்.
அதுசமயம், இந்த தாக்குதலுக்கும் அமெரிக்க படைகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என பென்டகன் செய்தித் தொடர்பாளர் கமாண்டர் Jessica L. McNulty கூறினார்.
ஆனால், தாக்குதல் தொடர்பில் ஈரான் மற்றும் இஸ்ரேல் தரப்பிலிருந்து எந்த விதமான அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.
Saviz மீதான தாக்குதலை தொடர்ந்து ஈரான்-இஸ்ரேல் இடையேயான பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.