பிரான்சில் கண்டுபிடிக்கப்பட்ட 'IHU' வைரஸ் ஆபத்தானதா? உலக சுகாதாரத்துறை வெளியிட்ட முக்கிய தகவல்
பிரான்சில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட IHU வைரஸ் குறித்து உலக சுகாதாரத்துறை சில முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளது.
கொரோனாவில் இருந்து உருமாறிய புதிய வகை வைரஸ் Omicron முதலில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. இதையடுத்து 110 மேற்பட்ட நாடுகளில் வேகமாக படையெடுத்து வருகின்றது.
இந்த புதிய ஒரு வகையான Omicron குறித்தே நாம் இன்னும் புரிந்து கொள்ளாத நிலையில் அதற்குள் அடுத்த ரகமான IHU வைரஸ் பாதிப்பு பிரான்ஸ் நாட்டில் கண்டறியப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டு தொடங்கிய கொரோனா இரண்டு ஆண்டுகள் கடந்தும் இன்னும் முடிந்தபாடில்லை.
இந்நிலையில் உலக சுகாதாரத்துறை புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ் குறித்து சில முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளது. தற்போது டெல்டாவின் இடத்துக்கு Omicron வைரஸ் வந்துவிட்டதால் மக்களிடையே பதற்றத்தை அதிகரித்துள்ளது.
நாளுக்கு நாள் Omicron மாறுபாட்டின் ஆட்டம் கொடூரமாக மாறி வருகின்றது. இந்நிலையில் பிரான்ஸ் நாட்டில் IHU என்னும் வைரஸ் பாதிப்பு 12 பேரை பாதித்து உள்ளதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி IHU என்னும் புதிய வைரஸ் வேறு எந்த நாடுகளிலும் கண்டறியப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வைரஸ் அபாயகரமானதா இல்லையா என்பது குறித்து இப்போது எதுவுமே சொல்ல முடியாது.
போதிய ஆய்வுகளுக்கு வெறும் 12 பேரின் மாதிரிகளை வைத்து சோதனை செய்ய முடியாது எனத் தெரிவித்துள்ளனர். ஆனால் தற்போதைக்கு IHU வைரஸால் எந்த ஆபத்தும் இல்லை. இதனால் உலக மக்கள் பதற வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.