ஒழுகும் கூரையை சரி செய்யாத வீட்டு உரிமையாளர்... திடீரென ஒரு நாள் நடந்த திகில் சம்பவம்
அமெரிக்காவில், தன் வீட்டின் கூரை ஒழுகுவதாக வீட்டு உரிமையாளரிடம் தொடர்ந்து புகார் தெரிவித்தும் அந்த வீட்டின் உரிமையாளர் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்கிறது ஒரு குடும்பம்.
ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள Lafayette என்ற இடத்திலுள்ள ஒரு வீட்டுக்கு தன் மனைவி Susan மற்றும் மகளுடன் குடிபுகுந்திருக்கிறார் Harry Pugliese.
கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்தே, வீட்டின் கூரை ஒழுகுவதாக வீட்டு உரிமையாளரான John Staffordஇடம் புகார் தெரிவித்தும் அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இப்படியிருக்கும் நிலையில், ஒரு நாள் அந்த கூரை இடிந்தே விழுந்துவிட்டிருக்கிறது.
பார்த்தால், அங்கு நான்கு பாம்புகள் வாழ்ந்துகொண்டிருக்கின்றன. பாம்புகளுடன், எலிகள், கரப்பான் பூச்சிகள், தேனீக்கள் என அங்கு ஒரு கூட்டமே வாழ்ந்து கொண்டிருந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர் Harry குடும்பத்தினர்.
திகிலடைந்த குடும்பத்தினர் விலங்குகள் கட்டுப்பாடு அமைப்பை அழைக்க, அவர்களோ, வீட்டு உரிமையாளரின் அனுமதியின்றி ஒன்றும் செய்யமுடியாது என்று கூறிவிட்டார்களாம்.
இந்த விடயம் தெரிந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காத Stafford, மாறாக, ஒரு வாரத்தில் வீட்டைக் காலி செய்யும்படி கூறிவிட்டாராம். வேறு வழியில்லாமல், Susanஉடைய அண்ணன் வீடு ஒன்றிற்கு குடிபெயர திட்டமிட்டுள்ளது Harry குடும்பம்!