நெருங்கிவரும் ஜேர்மனி பொதுத்தேர்தல்: களமிறங்கும் வேட்பாளர்கள் யார் யார்?
ஜேர்மனியில் பிப்ரவரி மாதம் 23ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஜேர்மன் அரசியல் கட்சிகள் தங்கள் கட்சி சார்பில் சேன்சலர் பதவிக்கான வேட்பாளர்கள் யார் யார் என அறிவித்துள்ளன.
களமிறங்கும் வேட்பாளர்கள் யார் யார்?
Social Democratic Party (SPD) கட்சி, தனது சேன்ஸலர் வேட்பாளராக, தற்போதைய சேன்ஸலரான ஓலாஃப் ஷோல்ஸையே களமிறக்குகிறது.
Christian Democratic Union (CDU) கட்சி, தனது சேன்ஸலர் வேட்பாளராக Friedrich Merz என்பவரைத் தேர்ந்தெடுத்துள்ளது.
Greens கட்சி, Robert Habeckஐ தனது கட்சி சார்பில் சேன்ஸலர் வேட்பாளராக தேர்ந்தெடுத்துள்ளது.
வலதுசாரிக் கட்சியான Alternative for Germany (AfD) கட்சி, தனது சேன்ஸலர் வேட்பாளராக Alice Weidel என்பவரை முன்னிறுத்தியுள்ளது.
Free Democratic Party (FDP) கட்சி, தனது கட்சி சார்பில் Christian Lindner என்பவரை சேன்ஸலர் வேட்பாளராக தேர்ந்தெடுத்துள்ளது.
Sahra Wagenknecht Alliance (BSW) கட்சி, தனது கட்சி சார்பில் Sahra Wagenknecht என்பவரை சேன்ஸலர் வேட்பாளராக களமிறக்கியுள்ளது.
The Left கட்சி, தனது கட்சி சார்பில் Jan van Aken என்பவரை சேன்ஸலர் வேட்பாளராக களமிறக்கியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |