ஏழை vs பணக்காரர்: புற்றுநோய் யாரை அதிகம் பாதிக்கிறது? அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்!
பொதுவாக, பணக்காரர்கள் ஆரோக்கியமாக இருப்பார்கள் என்ற எண்ணம் நம்மிடையே நிலவுகிறது. ஆனால், புதிய ஆய்வு முடிவுகள் அதை தவறாக நிரூபித்துள்ளன.
புற்றுநோய் குறித்த முக்கிய ஆராய்ச்சி
சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் ஏழை மக்களை விட பணக்காரர்களுக்கு கேன்சர் வரும் வாய்ப்பு அதிகம் என தெரியவந்துள்ளது.
பின்லாந்தின் ஹெல்சின்கி பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஒரு புதிய ஆய்வில், சமூக-பொருளாதார நிலை மற்றும் பல்வேறு நோய்களுக்கு இடையிலான தொடர்பு ஆராயப்பட்டது.
ஆச்சரியகரமான முடிவுகளில், ஏழைகளை விட பணக்காரர்களுக்கு மரபணு ரீதியாக புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகம் என்பது கண்டறியப்பட்டது.
மார்பகம், புரோஸ்டேட் மற்றும் பிற வகை புற்றுநோய்களுக்கு பணக்காரர்களுக்கு மரபணு ஆபத்து அதிகமாக உள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
இந்த ஆய்வின் முடிவுகள் புற்றுநோய் ஆபத்து மற்றும் சமூக-பொருளாதார நிலை ஆகியவற்றிற்கு இடையிலான சிக்கலான தொடர்புகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.
இந்த ஆய்வு முடிவுகள், கேன்சர் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கான திட்டங்களை வகுக்கும் போது, சமூக பொருளாதார நிலை மற்றும் மரபணு காரணிகளையும் கவனத்தில் கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றன.
ஆய்வின் முக்கிய கண்டுபிடிப்புகள்
புகைபிடித்தல், மது அருந்துதல் மற்றும் அதிக கொழுப்புள்ள உணவு போன்ற வாழ்க்கை முறை காரணிகளே பணக்காரர்களுக்கு புற்றுநோய் வர முக்கிய காரணம் என தெரியவந்துள்ளது.
ஏழை மக்களுக்கு சுற்றுச்சூழல் மாசுபாடு, போதிய சுகாதார வசதிகள் இல்லாமை போன்ற காரணிகளே புற்றுநோய் வர முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |