மின்சாரம், தண்ணீர் இல்லாமல் வளர்ந்தவர்.. இன்று ரூ.96960 கோடிக்கு சொந்தக்காரர்: யார் அவர்?
மின்சாரம், தண்ணீர் வசதி கூட கிடைக்காமல் வளர்ந்த கோடீஸ்வரர் ஒருவரை பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.
யார் அவர்?
கடந்த 2008 -ம் ஆண்டு நிறுவப்பட்ட புகழ்பெற்ற கிளவுட் செக்யூரிட்டி (cloud security) நிறுவனமான ஜெஸ்கேலரின் (Zscaler) CEO ஆன ஜெய் சௌத்ரி (Jay Chaudhry) பற்றி தான் பார்க்க போகிறோம்.
ஃபோர்ப்ஸின் (Forbes) கூற்றுப்படி, ஜூலை 16 நிலவரப்படி இவரின் நிகர மதிப்பு 11.6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும். இந்திய ரூபாயில் இதன் மதிப்பு ரூ.96960 கோடி ஆகும்.
இவரும், இவரது குடும்பத்தினரும் சேர்ந்து ஜெஸ்கேலரின் (Zscaler) 40 சதவீத பங்குகளை வைத்துள்ளனர். அதன் சந்தை மதிப்பு 30.91 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும்.
இவர், ஹிமாச்சல பிரதேசத்தின் உனா மாவட்டத்தில் உள்ள பனோஹ் கிராமத்தில் பிறந்தார். இவர் தனது 8 முதல் 10 -ம் வகுப்பு வரை மின்சாரம் மற்றும் தண்ணீர் இல்லாமல் வளர்ந்தார். இவர் மூன்றாவது இளைய மகன் ஆவார்.
வறுமையில் வாழ்ந்தாலும் ஐஐடி, பிஎச்யூவில் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்கில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.
இதையடுத்து, 1980 -ம் ஆண்டில் சின்சினாட்டி பல்கலைக்கழகத்தில் MS படிப்பதற்காக அமெரிக்கா சென்றார்.
பின்னர், தனது மனைவியுடன் சேர்ந்து 1997 -ம் ஆண்டில் முதல் சைபர் செக்யூரிட்டி நிறுவனமான செக்யூர் ஐடி-யை தொடங்கினார்.
இவர் Zscaler தொடங்குவதற்கு முன்பாக நான்கு தொழில்நுட்ப நிறுவனங்களை நிறுவினார். இந்த நிறுவனங்கள் அனைத்தும் பிற நிறுவனங்களால் கையகப்படுத்தப்பட்டன. அவை SecureIT, CoreHarbor, CyberTrust, Air Defence ஆகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |