கடந்த ஆண்டு அதிக சிக்சர் அடித்த வீரர் யார் தெரியுமா? 2ம் இடம் பிடித்த இந்திய வீரர்
கடந்த ஐசிசி போட்டி தொடர்களில் அதிக சிக்சர்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் இந்திய வீரர் அபிஷேக் சர்மா இரண்டாவது இடம் பிடித்துள்ளார்.
அதிக சிக்சர் விளாசிய வீரர்
கடந்த 2025ம் ஆண்டு ஐசிசி நடத்திய கிரிக்கெட் தொடர்களில் அதிக சிக்சர்கள் விளாசிய வீரர்களின் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள், நியூசிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஜிம்பாப்வே, வங்காளதேசம், அயர்லாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய 12 அணிகளில் இடம்பெற்ற வீரர்கள் மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் தென்னாப்பிரிக்க அணியின் வீரர் டிவால்ட் பிரெவிஸ் 32 இன்னிங்ஸில் 65 சிக்சர்களுடன் முதலிடம் பிடித்துள்ளார்.
Things that are unstoppable:
— KolkataKnightRiders (@KKRiders) September 24, 2025
1. Time
2. Ageing
3. Abhishek Sharma 🚀 pic.twitter.com/ouB0W3j3Fm
அவரை தொடர்ந்து இந்திய வீரர் அபிஷேக் சர்மா 21 இன்னிங்சில் 54 சிக்சர்கள் விளாசி இரண்டாவது இடம் பிடித்துள்ளார்.
இவர்களை தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஷாய் ஹோப் 50 இன்னிங்ஸில் 54 சிக்சர்களும், ஹாரி புரூக் 45 இன்னிங்ஸில் 50 சிக்சர்களும், சாஹிப்சாதா பர்ஹான் 26 போட்டிகளில் 45 சிக்சர்களும் அடித்து அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |