தமிழரான தந்தைக்கு பல ஆயிரம் கோடிகள் சொத்து... துறவியான மகன்: யார் அந்த நபர்?
தந்தையின் 5 பில்லியன் டொலர் சொத்துக்கள் வேண்டாம் என துறவறம் பூண்டுள்ளார் ஒருவர். யார் அவர்? அவரது தந்தை யார்?
துறவியான கோடீஸ்வரரின் மகன்
இலங்கைத் தமிழ் வம்சாவளியினரான த. ஆனந்த கிருஷ்ணன் மலேசிய தொலைத்தொடர்புத் துறை ஜாம்பவான் ஆவார்.
தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங் அணியை ஸ்பான்சர் செய்த ஏர்செல் நிறுவனத்தின் முன்னாள் உரிமையாளரான கிருஷ்ணனுடைய மகன், Ven Ajahn Siripanyo.
தந்தை கிருஷ்ணன் தொலைத்தொடர்பு, சேட்டிலைட்கள், ஊடகம், எண்ணெய், எரிவாயு மற்றும் ரியல் எஸ்டேட் துறைகளில் கோலோச்ச, மகன் Ajahn தந்தையின் கோடிக்கணக்கிலான சொத்துக்களைத் துறந்து துறவியாகியுள்ளார்.
கிருஷ்ணனின் சொத்து மதிப்பு 5 பில்லியன் அமெரிக்க டொலர்கள். இலங்கை மதிப்பில் 14,59,72,00,00,000.00 ரூபாய்.
Ajahnஉடைய தாயாகிய Momwajarongse Suprinda Chakraban, தாய்லாந்து ராஜ குடும்பப் பின்னணி கொண்டவர்.
18 வயதில் தன் தாயின் குடும்பத்தை சந்திப்பதற்காக தாய்லாந்து சென்றுள்ளார் Ajahn. சும்மா ஜாலியாக சுற்றுலா செல்லலாம் என தாய்லாந்துக்குச் சென்ற Ajahnஐ துறவு வாழ்க்கைக் கவர, இன்று தாய்லாந்து மியான்மர் எல்லையிலுள்ள மடாலயத்தில் துறவியாக வாழ்கிறார் அவர்.
தமிழ் முதலாக எட்டு மொழிகள் பேசும் Ajahn, பிரித்தானியாவில் கல்வி கற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |