ஈரான் கிளர்ச்சியில் இப்படி ஒரு சதியா? ட்ரம்ப் மீது கடும் கோபத்தில் போராட்டக்காரர்கள்
ஈரான் கிளர்ச்சியில் உள்ள சதி குறித்து இன்றைய அதிர்வு நிகழ்வில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
ஈரான் கிளர்ச்சிக்கு காரணம்
ஈரானில் கடந்த சில வாரங்களாக அரசுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், இந்த போராட்டத்தில் தற்போது வரை 5,000 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

போராட்டக்காரர்களை தாக்கினால் ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்த டிரம்ப், தொடர்ந்து போராடி அரசு கட்டிடங்களை கைப்பற்றுங்கள் உங்களுக்கான உதவி வந்து கொண்டிருக்கிறது என கூறினார்.
ஆனால், இதனை நம்பி வீதிக்கு வந்த போராட்டக்காரர்கள் உயிரிழந்துள்ள நிலையில், ஈரான் போராட்டக்காரர்களை தூக்கிலிடுவதை கைவிட்டதாக தன்னிடம் கூறியதாக டிரம்ப் தெரிவித்தார்.

டிரம்ப்பின் பேச்சை கேட்டு வீதிக்கு வந்த மக்கள், எந்த உதவியும் செய்யாததால் தற்போது அவர் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.
போராட்டத்திற்கு ஆதரவளித்த டிரம்ப், தற்போது ஈரான் விடயத்தில் பின்வாங்கியது ஏன்? ஈரானில் போராட்டம் தொடங்கப்பட்டது ஏன்? இதன் பின்னணியில் சிஐஏ மற்றும் மொசாத் உள்ளதா? ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதன் மூலம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு என்ன பயன் என இன்றைய அதிர்வு நிகழ்வில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
மேலதிக தகவல்களுக்கு வீடியோவை காண்க
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |