கோடிகளில் கொட்டும் பணம்: யார் இந்த தேன் மனிதர்?
பீகாரை சேர்ந்த சஞ்சய் சவுத்ரி என்பவர் தன்னுடைய தொழில் முனைவு ஆர்வத்தால் பாகல்பூரின் தேன் மனிதர் என செல்லப் பெயருடன் அழைக்கப்படுகிறார்.
பாகல்பூரின் தேன் மனிதர்
நெளகாச்சியா பகுதியின் அமர்பூர் கிராமத்தைச் சேர்ந்த சஞ்சய் சவுத்ரி தேனீ வளர்ப்பு தொழில் மூலம் உள்ளூர் மற்றும் அரசு அதிகாரிகள் மத்தியில் பாகல்பூரின் தேன் மனிதர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

சமீபத்தில் இந்தியாவின் பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் சஞ்சய் சேத், தேனீ வளர்ப்பாளர் சஞ்சய் சவுத்ரியின் வீட்டிற்கு வருகை தந்து, தேனீ வளர்ப்பு முறைகளை பார்வையிட்டதோடு, இயற்கையான தேனையும் சுவைத்து விட்டு சென்றார்.
இவரது வெற்றி கதையின் முக்கிய மைல் கல்லாக தற்போது, சவுத்ரியின் தேனீ வளர்ப்பு நிறுவனம் ஆண்டுக்கு ரூ.6 கோடி வரை வருமானத்தை ஈட்டி வருகிறது.
தேன் மனிதராக மாறியது எப்படி?
மத்திய வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்கள் மூலம் ரூ50,000 கடனுதவி பெற்ற சஞ்சய் சவுத்ரி 50 தேனீ வளர்ப்பு பெட்டிகளை வாங்கி லிச்சித் தோட்டத்தில் வைத்துள்ளார்.

தேனீ வளர்ப்பு மீதான அவரது ஆர்வம், ராமஷிஷ் சிங் என்பவரிடம் சிறந்த வழிகாட்டுதலை பெற்றார்.
மேலும் பீகார் வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரான டாக்டர் மேவாலால் சவுத்ரி நிதியுதவி அளித்து சஞ்சய் சவுத்ரியின் தேனீ வளர்ப்பு நுட்பங்களையும், கல்வியையும் வழங்கி உதவினார்.
சிறிய உற்பத்தியாளர் என்ற நிலையில் இருந்து தற்போது 30 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நிலைக்கு சஞ்சய் சவுத்ரி உயர்ந்துள்ளார்.
சஞ்சய் சவுத்ரி தன்னை போன்ற விவசாயிகளால் பீகார் தேன் உற்பத்தியில் இரண்டாவது பெரிய மாநிலமாக உயர்ந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |