ஈரானின் பலம் வாய்ந்த புதிய ஜனாதிபதி! யார் இந்த முகமது மொக்பர்?
ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததை தொடர்ந்து, நாட்டின் புதிய ஜனாதிபதியாக முகமது மொக்பர் இடைக்கால ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ளார்.
புதிய ஜனாதிபதி பொறுப்பேற்பு
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஈரானின் அஜர்பைஜானி எல்லையில் உள்ள மலைப்பகுதியில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லாஹியன் மற்றும் கிழக்கு அஜர்பைஜான் மாகாண கவர்னர் மலேக் ரஹ்மதி ஆகியோர் உயிரிழந்தனர்.
இதையடுத்து 12 மணி நேரங்களுக்கு பிறகு நேற்று அவர்களது உடல் மீட்கப்பட்டது.
இதனை தொடர்ந்து ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் உடல் தெற்கு கொராசான் மாகாணத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, அவரது சொந்த ஊரான மஷாத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளது.
இந்நிலையில், ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இறுதி சடங்குகள் வடமேற்கு ஈரானில் ஆரம்பமாகியுள்ளது.
ஈரானின் புதிய ஜனாதிபதி யார்?
ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததை தொடர்ந்து, நாட்டின் புதிய ஜனாதிபதியாக முகமது மொக்பர் இடைக்கால ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ளார்.
அதே சமயம் நாட்டின் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் பணிகளை 50 நாட்களுக்குள் நடத்தி முடிக்கும் பணிகள் தொடங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதிய ஜனாதிபதியை 50 நாட்களுக்கு தேர்ந்தெடுக்கும் பணிகளை முகமது மொக்பர், நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாக்கர் கலிபாஃப், நாட்டின் உச்சநீதிமன்ற தலைவர் கோலம்ஹோசைன் மொஹ்செனி ஆகியோர் அடங்கிய கவுன்சில் குழு மேற்கொண்டு வருகிறது.
யார் இந்த முகமது மொக்பர்?
செப்டம்பர் 1, 1955ல் பிறந்த முகமது மொக்பர் நாட்டின் உச்ச தலைவர் அலி கமேனியுடன் நெருக்கிய தொடர்பு இருப்பதுடன், அரசியல் அனுபவமிக்கவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்ராஹிம் ரைசி ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு முகமது மொக்பர் 2021ம் ஆண்டு முதல் துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்றார்.
முகமது மொக்பர் ரஷ்யாவுடன் பல முக்கிய பேச்சுவார்த்தைகளுக்கு தலைமை தாங்கியுள்ளார்.
அத்துடன் 1979 இஸ்லாமிய புரட்சிக்குப் பிறகு கைவிடப்பட்ட சொத்துக்களை நிர்வகிக்கும், முதன்மை தலைவருடன் இணைந்த முதலீட்டு நிதியான Setad-க்கு முகமது மொக்பர் தலைமை தாங்கினார்.
2013ம் ஆண்டு முகமது மொக்பர், அணுசக்தி மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை ஆகியவற்றில் ஈடுபட்டதாக கூறி EU தடைகளை எதிர்கொண்டார். ஆனால் பின்னர் 2012ம் ஆண்டு இந்த பட்டியலில் இருந்து முகமது மொக்பர் நீக்கப்பட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |