2025 ஆம் ஆண்டின் பணக்கார இந்திய CEO - யார் இந்த ஜெயஸ்ரீ உல்லால்?
2025 ஆம் ஆண்டில் பணக்கார இந்திய CEO பட்டியலில் ஜெயஸ்ரீ உல்லால் முதலிடம் பிடித்துள்ளார்.
Hurun india நிறுவனம், 2025 ஆம் ஆண்டின் பணக்கார இந்திய CEOக்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
ஜெயஸ்ரீ உல்லால்
இந்த பட்டியலில், இந்திய வம்சாவளியை சேர்ந்த கலிஃபோர்னியாவில் வசித்து வரும் ஜெயஸ்ரீ உல்லால் முதலிடத்தில் உள்ளார்.

64 வயதான ஜெயஸ்ரீ உல்லாலின் நிகர சொத்து மதிப்பு, 5.7 பில்லியன் டொலர்(இந்திய மதிப்பில் ரூ.50,170 கோடி) என மதிப்பிப்பட்டுள்ளது.
டெல்லியில் பள்ளிப்படிப்பை முடித்த ஜெயஸ்ரீ உல்லால், சான் பிரான்சிஸ்கோ அரசு பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் மற்றும் சாண்டா கிளாரா பல்கலைக்கழகத்தில் பொறியியல் நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.
ஜெயஸ்ரீ உல்லால் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் அரிஸ்டா நெட்வொர்க் நிறுவனத்தின் CEO ஆக பணியாற்றி வருகிறார்.

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தின் சாண்டா கிளாராவை தளமாகக் கொண்டு செயல்படும் அரிஸ்டா நெட்வொர்க், பெரிய தரவு மையங்கள், கிளவுட் வழங்குநர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு உயர் செயல்திறன் கொண்ட, மென்பொருள் சார்ந்த நெட்வொர்க்கிங் தீர்வுகளை வடிவமைக்கும் நிறுவனம் ஆகும்.

அதற்கு முன்னதாக சிஸ்கோ சிஸ்டம்ஸ், ஏஎம்டி மற்றும் ஃபேர்சைல்ட் செமிகண்டக்டர் ஆகிய நிறுவனங்களில் முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.
மைக்ரோசாப்ட் CEO சத்யா நாதெல்லா, கூகிள் CEO சுந்தர் பிச்சை, பாலோ ஆல்டோ நெட்வொர்க்ஸ் CEO நிகேஷ் அரோரா ஆகியோரும் இந்த பட்டியலில் உள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |