இந்தியாவின் வெற்றிக்கு காரணமான ஜெமிமா; ஹாக்கி முதல் கிரிக்கெட் - யார் இவர்?
இந்திய அபார வெற்றி
நேற்று நவி மும்பையில் நடைபெற்ற மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்டின் அரையிறுதி போட்டியில், இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதியது.

இதில், நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாட்டம் ஆடிய அவுஸ்திரேலிய அணி, 49.5 ஓவர்களில் 338 ஓட்டங்கள் எடுத்தது.
339 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 48.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பில் 338 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இதன் மூலம், மகளிர் ODI கிரிக்கெட்டில் அதிக பட்ச ரன் சேசிங் செய்த அணி, உலகக்கோப்பை நாக் அவுட் போட்டியில், 300 ஓட்டங்களுக்கு மேல் எடுத்த ஒரே அணி என்ற சாதனையை இந்திய மகளிர் அணி படைத்தது.
ஜெமிமா ரோட்ரிக்ஸ்
ஜெமிமா ரோட்ரிக்ஸ் (Jemimah Rodrigues) 134 பந்துகளில் 14 பவுண்டரிகள் உட்பட 124 ஓட்டங்கள் எடுத்தது, இந்தியாவின் வெற்றிக்கு முக்கியாக காரணமாக இருந்துள்ளது. இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்திற்ககான விருது அவருக்கு வழங்கப்பட்டது.

மும்பையில் பிறந்த ஜெமிமா முதலில் ஹாக்கி வீராங்கனையாக இருந்துள்ளார். 17 வயதுகுப்பட்ட மகாராஷ்டிரா மகளிர் ஹாக்கி அணியில் விளையாடியுள்ளார்.
அதன் பின்னர் கிரிக்கெட்டில் கவனம் செலுத்திய அவர், 2017 ஆம் ஆண்டில் 19 வயதுகுத்தப்பட்டோருக்கான தொடரில் மகாராஷ்டிரா அணிக்கு எதிராக இரட்டை சதம் அடித்து கவனம் பெற்றார்.

ஸ்ம்ரிதி மந்தனாவிற்கு பிறகு இரட்டை சதம் அடித்த 2வது வீராங்கனை என்ற பெருமையை பெற்றார்.
2018 ஆம் ஆண்டில் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான T20 போட்டியின் மூலம் அணியில் இடம் பிடித்தார். 2022 ஆசியக் கோப்பை, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.
2018 ஆம் ஆண்டில், சிறந்த உள்நாட்டு ஜூனியர் பெண்கள் கிரிக்கெட் வீராங்கனைக்கான ஜக்மோகன் டால்மியா விருதை பிசிசிஐ வழங்கியது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் | 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        