ஜேர்மன் இளம்பெண்களை தாக்கிய புலம்பெயர்ந்தோர்: தட்டிக் கேட்டு கத்திக்குத்து வாங்கியவர் இவர்தான்
ஜேர்மனியில், ஓடும் ரயிலில் ஜேர்மன் நாட்டவர்களான இளம்பெண்கள் இருவரை தொந்தரவு செய்த நபர்களைத் தட்டிக் கேட்ட அமெரிக்கருக்கு கத்திக் குத்து விழுந்தது.
அமெரிக்கருக்கு கத்திக் குத்து
ஜேர்மனியின் Dresden நகரில், ஓடும் ரயிலில் இளம்பெண்கள் இருவரை தொந்தரவு செய்துள்ளார்கள் சிலர். அந்தப் பெண்களை முரட்டுத்தனமாக தாக்கவும் செய்துள்ளார்கள் அவர்கள்.
அப்போது அதே ரயிலில் பயணித்துக்கொண்டிருந்த அமெரிக்கரான ஜான் ருடாட் (John Rudat, 21) என்பவர் அந்தப் பெண்ணுக்கு தொந்தரவு கொடுத்தவர்களை தட்டிக் கேட்டுள்ளார்.
உடனே அவர்களில் ஒருவர் ஜானை கத்தியால் சரமாரியாகத் தாக்கியுள்ளார். ஜானுடைய முகத்தில் பல வெட்டுக்காயங்கள் ஏற்பட்டுள்ளன.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஜானுக்கு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கத்தியால் தாக்கியவரும் அவருடன் இருந்த ஒருவரும் தப்பியோட, அவர்களில் ஒருவரான 21 வயதுடைய சிரியா நாட்டவரான ஒருவரை பொலிசார் கைது செய்ய, மற்றவர் தலைமறைவாகிவிட்டார்.
தட்டிக் கேட்டவர் இவர்தான்
ஜேர்மன் நாட்டவர்களான இளம்பெண்கள் இருவரை தாக்கிய நபர்களைத் தட்டிக் கேட்ட அமெரிக்கர் குறித்த சில கூடுதல் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
வெளிநாட்டு மாணவர்கள் பரிமாற்ற திட்டத்தின் கீழ் அமெரிக்காவிலிருந்து ஜேர்மனிக்கு வந்த ஜான் ருடாட் (John Rudat, 21), Dresden நகரில் தன்னை ஸ்பான்சர் செய்த குடும்பத்துடன் தங்கியிருக்கிறார்.
நியூயார்க்கைச் சேர்ந்த ஜான், ஒரு பகுதி நேர மொடலும், மருத்துவ உதவிக்குழுவில் பணியாற்றுபவரும் ஆவார்.
தன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து மௌனம் கலைத்துள்ள ஜான், ஐரோப்பாவில் புலம்பெயர்ந்தோர் பிரச்சினை இல்லை என பலரும் கருதும் நிலையில், ஜேர்மனியில் புலம்பெயர்ந்தோர் பிரச்சினை உள்ளது என்பதை தான் கண்ணாரக் கண்டதாக கூறுகிறார்.
தன்னைத் தாக்கியவர் ஒரு சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் என்றும், அவர் ஜேர்மன் குடிமக்களையே தாக்கியும், 12 மணி நேரத்தில் அவர் விடுவிக்கப்பட்டுவிட்டதாகவும் கூறுகிறார் ஜான்.
இந்நிலையில், ஜேர்மனியிலுள்ள அமெரிக்கத் தூதரகம், ஜானைத் தாக்கியவர்களை தண்டிக்குமாறு ஜேர்மன் அதிகாரிகளை வளியுறுத்தியுள்ளது.
We strongly condemn the brutal attack on an American citizen in Dresden. While courageously intervening to protect a fellow passenger, he was viciously attacked. We urge German authorities to swiftly bring the perpetrators to justice and punish them to the fullest extent…
— US-Botschaft Berlin (@usbotschaft) August 25, 2025
அமெரிக்கக் குடிமகன் ஒருவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலை தாங்கள் வன்மையாக கண்டிப்பதாகவும், தாக்குதல்தாரிகளை நீதிக்கு முன் கொண்டுவந்து நிறுத்தி அவர்களுக்கு தக்க தண்டனை வழங்குமாறும் ஜேர்மன் தூதரகம் சமூக ஊடகமான எக்ஸில் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |