பாதி அமெரிக்காவை வாங்கும் அளவிற்கு செல்வம் - யார் இந்த லாரி ஃபிங்க்?
அமெரிக்காவின் ஜிடிபியில் பாதியளவை மேலாண்மை செய்யும் லாரி ஃபிங்க் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ப்ளாக்ராக்
உலகின் முதல் பணக்காரர் என்றால் நினைவிற்கு வருவது எலோன் மஸ்க் தான். ஆனால், எலோன் மஸ்கின் சொத்துக்களை விட 10 மடங்கு அதிக பணத்தை ஒருவர் நிர்வாகம் செய்து வருகிறார்.
அமெரிக்காவை சேர்ந்த லாரி ஃபிங்க், ப்ளாக்ராக்(Block Rock) என்ற சொத்து மேலாண்மை நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதுவே உலகின் மிகப்பெரிய சொத்து மேலாண்மை நிறுவனம் ஆகும்.

1988 ஆம் ஆண்டு தனது 7 கூட்டாளிகளுடன் இணைந்து இந்த நிறுவனத்தை தொடங்கிய லாரி ஃபிங்க், அதன் தலைமை செயல் அதிகாரியாக செயல்பட்டு வருகிறார்.
இந்த நிறுவனத்திற்கு 30 நாடுகளில் 70 அலுவகங்கள் உள்ளன.100க்கும் மேற்பட்ட நாடுகளில் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
இந்த நிறுவனம் மொத்தமாக 13.52 ட்ரில்லியன் டொலர் மதிப்புள்ள சொத்துக்களை நிர்வாகம் செய்து வருகிறது. இது பல நாடுகளின் மொத்த ஜிடிபியை விட அதிகம் ஆகும்.
அமெரிக்காவின் ஜிடிபி 31.82 ட்ரில்லியன் டொலர் ஆகும். இதில் சுமார் பாதியளவை ப்ளாக்ராக் மேலாண்மை செய்வதால் லாரி ஃபிங்க் அமெரிக்காவின் பாதி உரிமையாளர் என கருதப்படுகிறார்.

இந்தியாவில் உள்ள பல முன்னணி நிறுவனங்கள் உட்பட, உலகம் முழுவதும் உள்ள பல்வேறு பெரிய நிறுவனங்களிலும் பிளாக்ராக் பங்குகளை வைத்திருக்கிறது.
யார் இந்த லாரி ஃபிங்க்?
பிளாக்ராக் நிறுவனத்தை தொடங்கும் முன்பு, லாரி ஃபிங்க் தி ஃபர்ஸ்ட் பாஸ்டன் கார்ப்பரேஷனின் நிர்வாக இயக்குநராகவும் இருந்தார்.
மேலும், உலக பொருளாதார மன்றத்தின் இணைத் தலைவராகவும், NYU லாங்கோன் மருத்துவ மைய அறங்காவலர் குழுவின் இணைத் தலைவராகவும் பணியாற்றுகிறார். நவீன கலை அருங்காட்சியகம் மற்றும் சர்வதேச மீட்புக் குழுவின் வாரியங்களிலும் பணியாற்றுகிறார்.

2025 ஆம் ஆண்டில், டைம் பத்திரிகை இவரை உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க 100 நபர்களில் ஒருவராக பட்டியலிட்டது.
2024 ஆம் ஆண்டில், ஃபிங்கின் நிகர மதிப்பு 1.2 பில்லியன் டொலர் என ஃபோர்ப்ஸ் மதிப்பிடப்பட்டது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |