ஆப்கானிஸ்தானின் பிரதமர் ஆகும் இந்த தாலிபான் தலைவர் யார் தெரியுமா? வெளிவரும் முக்கிய தகவல்

Afghanistan Taliban Kapul
By Kaviarasan Sep 09, 2021 09:59 AM GMT
Report

ஆப்கானிஸ்தானில் பிரதமராக பதவியேற்கவுள்ள முல்லா ஹசன் அகுந்த் பற்றி, பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த மாதம் 15-ஆம் திகதி ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தாலிபான்கள், அதன் பின் 31-ஆம் திகதி வரை அமெரிக்க படைகள் வெளியேறுவதற்கு காலக்கெடு கொடுத்தனர்.

அதன் படி கடந்த 30-ஆம் திகதி நள்ளிரவே அமெரிக்காவின் கடைசி படை வீரர் ஆப்கானிஸ்தானின், காபூல் நகரை விட்டு வெளியேறும் புகைப்படங்கள் வெளியாகின.

இதையடுத்து தற்போது ஆப்கானிஸ்தானி, புதிய அரசை அமைப்பதற்கான அடுத்தகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதில், தாலிபான் பயங்கரவாத அமைப்பை நிறுவியவர்களில் ஒருவரும், அந்த அமைப்பின் தற்போதைய தலைவருமான முல்லா அப்துல் கனி பரதர் புதிதாக அமையும் அரசின் தலைமை பொறுப்பை ஏற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆப்கானிஸ்தானின் பிரதமர் ஆகும் இந்த தாலிபான் தலைவர் யார் தெரியுமா? வெளிவரும் முக்கிய தகவல் | Who Is Mullah Hasan Akhund Full Details

ஆனால், தலிபான்களுக்கு ஆதரவாக செயல்படும் பாகிஸ்தானை மையமாக கொண்ட ஹக்கானி வலைக்குழுவுக்கும்‌ முல்லா அப்துல் கனி பரதருக்கும் இடையிலான அதிகார போட்டி காரணமாக புதிய அரசு அமைவதில் காலதாமதம் நிலவி வந்தது.

இந்நிலையில் தலிபான்கள் நேற்று முன்தினம் புதிய இடைக்கால அரசை அறிவித்தனர். அதில், பிரதமராக முல்லா ஹசன் அகுந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். முல்லா அப்துல் கனி பரதருக்கு துணை பிரதமர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

புதிய அரசின் பதவியேற்பு விழா எப்போது நடைபெறும், தலைமை பொறுப்புக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் எவ்வளவு காலம் பதவியில் இருப்பார்கள் போன்ற விவரங்களை தலிபான்கள் தெரிவிக்கவில்லை.

ஆனால், இந்த பதவியேற்பு விழாவிற்கு ரஷ்யா, சீனா, பாகிஸ்தான் போன்ற ஆறு நாடுகளுக்கு அழைப்புவிடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இடைக்கால பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ள முல்லா ஹசன் அகுந்த் முந்தைய தலிபான்கள், அதாவது 1996-2001ஆட்சியில் சக்தி வாய்ந்த தலைவராக இருந்து வந்துள்ளார். அப்போதைய தாலிபான்கள் ஆட்சியில் இவர், துணை பிரதமராகவும் வெளியுறவு மந்திரியாகவும் பொறுப்பு வகித்துள்ளார்.

முல்லா ஓமருடன் சேர்ந்து தலிபான் அமைப்பை நிறுவியவர்களில் இவரும் ஒருவராவார். இவர் முல்லா ஓமருக்கு மிகவும் நெருக்கமானவர்.

ஆப்கானிஸ்தானின் பிரதமர் ஆகும் இந்த தாலிபான் தலைவர் யார் தெரியுமா? வெளிவரும் முக்கிய தகவல் | Who Is Mullah Hasan Akhund Full Details

கடந்த 2001-ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானின் பாமியான் நகரில் இருந்த உலகப் புகழ் பெற்ற புத்தர் சிலையை குண்டு வைத்து தகர்க்க மூலகாரணமாக இருந்தவரும் இவர் தான்,

இதனால், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் முல்லா ஹசன் அகுந்தை தனது பயங்கரவாத தடுப்பு பட்டியலில் சேர்த்தது. இப்போதும் ஐ.நா. தடைப்பட்டியலில் அவரது பெயர் உள்ளது‌.

தாலிபான்கள் நாட்டைக் கைப்பற்றிய பின்பு, ஒரு முறையான ஷரியத் சட்டப்படி ஆட்சி நடைபெறும், பெண்களுக்கு மரியாதை கொடுக்கப்படும் என்றெல்லாம் கூறினர். ஆனால், நாட்கள் செல்ல செல்ல, அவர்களின் அறிவிப்பு, நடவடிக்கை எல்லாம் அப்படியே மாறி வருவது, அங்கிருக்கும் மக்களுக்கு பெரும் பயத்தை கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.   

மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US