பிரித்தானியாவின் அடுத்த பிரதமராக யாரால் திறம்பட செயல்படமுடியும்? எழுந்துள்ள கேள்வி
புலம்பெயர்தல் உட்பட பல்வேறு பிரச்சினைகளை சரியாக கையாளவில்லை என்பதற்காகத்தான் பிரித்தானிய மக்கள் கன்சர்வேட்டிவ் கட்சியிடமிருந்த ஆட்சியைப் பறித்து லேபர் கட்சியிடம் ஒப்படைத்தார்கள்.
ஆனால், லேபர் கட்சித் தலைவரான கெய்ர் ஸ்டார்மராலும் அந்த பிரச்சினைகளை சரியாக கையாள முடியவில்லை என்னும் எண்ணம் மக்களுக்கு வந்துவிட்டது.

ஆகவே, ஸ்டார்மரை விட யாரால் நாட்டை சிறப்பாக ஆளமுடியும் என்னும் ஒரு கேள்வி எழுந்துள்ளது.
அடுத்த பிரதமராக யாரால் திறம்பட செயல்படமுடியும்?
பிரதமராக பதவி வகிக்கும் ஸ்டார்மரால் திறம்பட செயல்பட முடியவில்லை என்பதால், அவரை பதவியிலிருந்து நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக வேறொருவரை பிரதமராக்குவது குறித்த பேச்சு தொடர்ந்து அடிபட்டுவருகிறது.
அவ்வகையில், ஸ்டார்மர் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டால், அவருக்கு பதிலாக யார் பிரதமராவார், பிரித்தானியாவின் அடுத்த பிரதமராக யாரால் திறம்பட செயல்படமுடியும் என்பது குறித்த சில கணிப்புகள் வெளியாகிவருகின்றன.
அவர்கள் யார் என்று பார்க்கலாம்...
ஏஞ்சலா ரெய்னர்
அரசியலைப் பொருத்தவரை, எல்லாம் நேரம்தான். ஆக, பிரித்தானிய துணை பிரதமராக பொறுப்பு வகித்த ஏஞ்சலா ரெய்னர் மீது வரி ஏய்ப்பு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.

ஆனால், பதவியில் இல்லாமலிருந்த காலகட்டத்தை, அவர் தன்னை மீண்டும் தயார் செய்துகொள்ளும் ஒரு காலகட்டமாக பயன்படுத்திக்கொண்டிருக்கலாம்.
எனவே, ஸ்டார்மர் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்படும் நிலையில், ஏஞ்சலா பிரதமராகலாம் என கணிக்கப்படுகிறது.
வெஸ் ஸ்ட்ரீட்டிங்
ஏற்கனவே, பிரித்தானிய பிரதமரான கெய்ர் ஸ்டார்மரின் பதவியைக் கவிழ்க்க சதி நடப்பதாகவும், அதன் பின்னணியில் சுகாதாரத்துறைச் செயலரான வெஸ் ஸ்ட்ரீட்டிங் (Wes Streeting) இருப்பதாகவும் பிரதமரின் ஆதரவாளர்கள் குற்றம் சாட்டியிருந்தார்கள்.

அவர் அதை மறுத்தாலும், சமீபத்திய கருத்துக்கணிப்புகளில் வெஸ்சுக்கு மக்களிடையே ஆதரவு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. ஆக, அடுத்த பிரதமராக வாய்ப்புள்ளவர்கள் பட்டியலில் வெஸ் பெயரும் உள்ளதை மறுப்பதற்கில்லை.
ஷபானா மஹ்மூத்
ஸ்டார்மரை விட யாரால் நாட்டை சிறப்பாக ஆளமுடியும் என்னும் கேள்வி எழும் நிலையில், பிரித்தானிய அரசியலில் முக்கிய பிரச்சினையாகிவிட்ட புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த கடும் நடவடிக்கைகள் எடுத்துவரும் உள்துறைச் செயலரான ஷபானா மஹ்மூதின் பெயரை யாரும் மறக்க முடியாது.

ஷபானாவுக்கு ஆதரவளிக்கும் ஒரு வலிமையான கூட்டம் இருந்தாலும், புலம்பெயர்தல் மீதான அவரது கடும் கட்டுப்பாடுகளால், கட்சி உறுப்பினர்களிடையே அவருக்கு ஆதரவு குறைந்துள்ளது.
அத்துடன், பிரித்தானியா ஒரு இஸ்லாமியப் பெண்ணால் ஆளப்படுவதற்கு தயாராக உள்ளதா என்று கேட்டால், ஷபானாவுக்கே அது குறித்த உறுதியான நிலைப்பாடு இல்லை என்கிறார்கள் அவரது நண்பர்கள்!
மற்றபடி, ஆற்றல் பாதுகாப்புத்துறை செயலரான எட் மிலிபேண்ட் (Ed Miliband), பாதுகாப்புத்துறை செயலரான ஜான் ஹீலி (John Healey) முதலான பலர், அடுத்த பிரதமராகும் வாய்ப்புள்ளவர்கள் பட்டியலில் இருக்கிறார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |