IPL மூலம் கோடிகளை அள்ளும் Dream11 - அதன் உரிமையாளர் மற்றும் வருவாய் தெரியுமா?
2008 ஆம் ஆண்டு இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்கப்பட்டது. ஐபிஎல் தொடருக்கு கிடைத்த பெரும் வரவேற்பையடுத்து, தற்போது 18வது ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது.
ஐபிஎல் கிரிக்கெட்
அதே 2008 ஆம் ஆண்டு, இந்தியாவில் Dream11 என்ற பெயரில் பேண்டஸி கேமிங் தொடங்கப்பட்டது.
கிரிக்கெட் பார்க்கும் பெரும்பாலனவர்களுக்கு Dream11 தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.
காரணம், Dream11 கிரிக்கெட் ரசிகர்களால் வெறித்தனமாக விளையாடப்பட்டு வருகிறது.
Dream11 இயங்குவது எப்படி?
கிரிக்கெட் போட்டி தொடங்கும் முன்னர், பேண்டஸி கிரிக்கெட்டான Dream11 ல் விளையாடுபவர்கள், அணித்தலைவர், துணை தலைவர் உட்பட 11 பேர் கொண்ட கற்பனையான அணி ஒன்றை உருவாக்க வேண்டும்.
நாம் தேர்வு செய்திருக்கும் கற்பனை அணியில் உள்ள வீரர்கள் யார் யார் எவ்வளவு ஓட்டங்கள், விக்கெட்கள் எடுக்கிறார்கள் என்பதை வைத்து இதில் புள்ளிகள் கிடைக்கும்.
யாருடைய அணி அதிகபுள்ளிகள் எடுக்கிறதோ அதுவே வெற்றிபெறும் அதன் மூலம் பணம் கிடைக்கும். இதில், சில போட்டிகளுக்கு நுழைவு கட்டணம் செலுத்த வேண்டும். இலவசமாக கூட சில போட்டிகளை விளையாடிய முடியும்.
இதில் வெற்றி பெறுபவர்களுக்கு சில குறிப்பிட்ட அளவிலான தொகையை வழங்கி விட்டு, இதன் மூலம் Dream11 பல கோடிகளை அள்ளுகிறது.
Dream11 துவக்கம்
மும்பையை சேர்ந்த ஹர்ஷ் ஜெயின்(Harsh Jain), என்பவர் தனது கல்லூரி நண்பர் பவித் சேத் என்பவருடன் சேர்ந்து இந்த நிறுவனத்தை துவக்கினார்.
கிரிக்கெட் மற்றும் கால்பந்து மீது தீவிர ஆர்வம் கொண்ட ஹர்ஷ் ஜெயின், அமெரிக்காவில் பொறியியல் படித்துக் கொண்டிருந்தபோது, பேண்டஸி கால்பந்து விளையாடுவார்.
அதே போல், இந்தியாவில் ஐபிஎல் தொடங்கியபோது, பேண்டஸி கிரிக்கெட்க்காக ட்ரீம் 11 தொடங்க யோசனை அவருக்கு வந்தது.
ஆரம்பத்தில் பெரிதாக பலரும் இதில் ஆர்வம் காட்டவில்லை. அதன் பின்னர் பல்வேறு மாற்றங்களை செய்த உடன், ரசிகர்கள் Dream11 நோக்கி படையெடுக்க தொடங்கினர்.
20016 ஆம் ஆண்டில் Dream11 ல் 2 மில்லியன் பயனர்கள் இருந்தனர். தற்போது இந்த எண்னிக்கை 220 மில்லியனுக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.
ரூ.6,384 கோடி வருவாய்
இது ஒரு சூதாட்ட செயலி என்றும் இதை தடை செய்ய வேண்டுமென்றும், Dream11க்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
"எந்தவிதத் திறனும் ஆராய்ச்சியும் இல்லாமல் அதிர்ஷ்டத்தை மட்டுமே நம்பி அதன் மூலம் பணம் வெல்வதே சூதாட்டம். Dream11 ல் பணம் வெல்வதற்கு கிரிக்கெட் பற்றிய அறிவு வேண்டும்" என Dream11 சார்பில் வாதிட்டு வென்றது.
அறிக்கைகளின் படி, 2023 நிதியாண்டில் Dream11 ரூ. 6,384 கோடி வருவாய் ஈட்டியதாக கூறப்படுகிறது. மேலும், ஐ.பி.எல், இந்திய கிரிக்கெட் அணிக்கு ஸ்பான்ஸராக Dream11 மாறியுள்ளது.
தற்போது, பங்குச் சந்தையில் பட்டியலிடப்படாமலேயே 1 பில்லியன் டாலர் மதிப்பை எட்டி, இந்தியாவின் முதல் `யுனிகார்ன்' அந்தஸ்தைப் பெற்ற கேமிங் நிறுவனம் எனும் அந்தஸ்தை பெற்றுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |