ரூ.28.4 கோடிக்கு 2 இளம் வீரர்களை அள்ளிய CSK - யார் இந்த கார்த்திக் சர்மா, பிரசாந்த் வீர்?
2026 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் இன்று மதியம் 2;30 மணிக்கு(இந்திய நேரப்படி) அபுதாபியில் தொடங்கியில் நடைபெற்று வருகிறது.
2026 ஐபிஎல் மினி ஏலம்
இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.43.40 கோடி பர்ஸ் தொகையுடன் ஏலத்தில் கலந்து கொண்டது.

முதலில், மேற்கிந்திய தீவுகள் அணியின் ஆல் ரவுண்டரான அகில் ஹுசைனை ரூ.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
CSK அணியின் முன்னாள் வீரர் ஜடேஜாவின் தீவிர ரசிகரான ஜடேஜாவைப் போலவே இவரும் இடதுகை துடுப்பாட்டக்காரர் மற்றும் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
READY PLAYER 1️⃣🦁
— Chennai Super Kings (@ChennaiIPL) December 16, 2025
Welcome to the den, AKEAL!🥳#WhistlePodu #IPLAuction pic.twitter.com/w7sgmybRcL
அதைத்தொடர்ந்து, இளம் வீரர்கள் பிரசாந்த் வீர், கார்த்திக் சர்மா ஆகிய இருவரை தலா 14.2 கோடிக்கு வாங்கி, ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட Un capped இந்திய வீரர்கள் என்ற பெருமையை வழங்கியுள்ளது.
பிரசாந்த் வீர்
உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த 20 வயதான பிரசாந்த் வீர், இடது கை ஸ்பின்னர் மற்றும் இடதுகை துடுப்பாட்டக்காரர் ஆவார்.
Entering the world of yellove and how?🥳🔥
— Chennai Super Kings (@ChennaiIPL) December 16, 2025
Prashant Veer, the most expensive uncapped player in the IPL!📈📈#WhistlePodu #IPLAuction pic.twitter.com/OwJY0FhoZK
உத்திரபிரதேச டி20 லீக்கில், 155.34 ஸ்ட்ரைக் ரேட்டில் 3 அரைசதங்களுடன் 320 ஓட்டங்கள் எடுத்ததோடு, 6.69 என்ற எகானமி உடன் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி வளர்ந்துவரும் வீரருக்கான விருதை வென்றார்.

கார்த்திக் சர்மா
ராஜஸ்தானை சேர்ந்த 19 வயது வீரரான கார்த்திக் சர்மா, ரஞ்சி கோப்பையில், அறிமுகப் போட்டியிலேயே 115 பந்துகளில் 113 ஓட்டங்களை எடுத்து கவனத்தை ஈர்த்தார்.
Yet another young one enters the den! 🦁🏟️
— Chennai Super Kings (@ChennaiIPL) December 16, 2025
Whistle welcome, Kartik Sharma!🥳#WhistlePodu #IPLAuction pic.twitter.com/1haBu8esPZ
சையத் முஷ்டாக் அலி தொடரில், ராஜஸ்தான் அணிக்காக 11 டி20 போட்டிகளில் விளையாடி, 26 சிக்சர்கள் மற்றும் 2 அரை சதங்கள் உட்பட 316 ஓட்டங்கள் எடுத்துள்ளார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 164.58ஆக உள்ளது.

விக்கெட் கீப்பரான இவர், 19 வயதுக்குட்பட்ட ராஜஸ்தான் இளையோர் அணியின் அணித்தலைவராக செயல்பட்டு வருகிறார்.
From yellow nation to the Yellove nation!💛
— Chennai Super Kings (@ChennaiIPL) December 16, 2025
Big whistles to you, Short! 🥳#WhistlePodu #IPLAuction pic.twitter.com/h8T7Rzpd4v
அதைத்தொடர்ந்து அவுஸ்திரேலிய வீரர் மேத்யூ ஷார்ட்டை, ரூ.1.50 கோடிக்கு வாங்கியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |