சவுதி மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர்: ரூ.34 கோடி செலுத்தி கேரள மக்கள்: யார் இந்த ரஹீம்?
சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நபரை ரூ.34 கோடி செலுத்தி கேரள மக்கள் பத்திரமாக மீட்டு இருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சவுதியில் தூக்கு தண்டனை
கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த அப்துல் ரஹீம் என்ற நபர் கடந்த 2006 ஆண்டு வேலை நிமித்தமாக வளைகுடா நாட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக, சவுதியில் தான் கவனித்து கொண்டிருந்த மாற்றுத்திறனாளி சிறுவன் ஒருவனின் தற்செயலான மரணத்திற்கு காரணமாக அமைந்ததை தொடர்ந்து ரஹீம் சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினர் ரஹீமுக்கு பொது மன்னிப்பு வழங்க மறுத்த விட்ட நிலையில், அவருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.
ரூ 34 கோடி நஷ்ட ஈடு கொடுத்த கேரள மக்கள்
அதே நேரத்தில் குறிப்பிட்ட காலத்திற்குள் அபராதமாக ரூ.34 கோடி செலுத்தினால் மரண தண்டனை ரத்து செய்யப்படும் என்றும் அறிவித்தது.
இதையடுத்து அப்துல் ரஹீம் தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரி கேரள மக்கள் ஒன்று திரண்டு ரூ.34 கோடி செலுத்தி அவரை மரண தண்டனையில் இருந்து காப்பாற்றியுள்ளனர்.

மேலும் அவரை சிறை தண்டனையில் இருந்தும் விடுவித்து சவுதி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் 20 ஆண்டுகளுக்கு பிறகு கேரளாவின் கரிப்பூர் விமான நிலையத்தில் வந்து இறங்கிய அப்துல் ரஹூமை குடும்பத்தினர் திரண்டு வந்து வரவேற்றனர்.
மேலும் தன்னுடைய விடுதலைக்காக உதவிய அனைத்து கேரள மக்களுக்கும் நன்றி என்று ரஹூம் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |