ஈரானின் ராணுவ தரைக்கட்டுப்பாடு மையம் மீது தாக்குதல்: போர் நிறுத்தத்தை மீறிய அமெரிக்க படைகள்
ஹார்முஸ் ஜலசந்தி அருகே அமைந்துள்ள ஈரானிய இராணுவ தளம் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது.
ஈரானிய இராணுவ தளம் மீது தாக்குதல்
ஈரான் நாட்டின் முக்கிய துறைமுக நகரான பந்தர் அப்பாஸில் அமைந்துள்ள இராணுவ தளம் இந்த தாக்குதலில் முக்கிய இலக்காக அமைந்துள்ளது.
மேலும் ஈரானிய ஊடகங்கள் வெளியிட்ட தகவலில், பந்தர் அப்பாஸ் நகரின் கிழக்குப் பகுதியில் 3 பயங்கர குண்டுவெடிப்பு சத்தங்கள் கேட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க படைகளின் இந்த திடீர் வான்வழித் தாக்குதலை தொடர்ந்து ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள் தீவிர கண்காணிப்பு மற்றும் இடைமறித்தல் பணியில் முடக்கிவிடப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிகாரிகள் தகவல்
அமெரிக்காவின் தாக்குதலில் பந்தர் அப்பாஸ் நகரில் அமைந்துள்ள ஈரானின் தரைக்கட்டுப்பாடு மையம் தான் முதன்மை இலக்காக இருந்ததாக பெயர் குறிப்பிட விரும்பாத அமெரிக்க அதிகாரி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தகவல் பகிர்ந்துள்ளார்.
அத்துடன் இந்த பகுதியில் அமெரிக்க படைகள் மற்றும் கப்பல்களுக்கு இடையூறாக இருந்த ஈரானிய படைகளின் அதிநவீன ட்ரோன்களை சுட்டு வீழ்த்தப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கையானது தற்காப்பு தாக்குதல் மட்டுமே மற்றும் நடைமுறையில் உள்ள போர் நிறுத்தத்தை தொடர்ந்து நிலைநாட்டுவதற்காகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |