ரூ.8000 கோடிக்கு பணியமர்த்தப்பட்ட இந்திய வம்சாவளி - யார் இந்த ரோச்சன் சங்கர்?
இந்திய வம்சாவளி ஒருவரை தங்கள் நிறுவனத்தில் இணைக்க Nvidia நிறுவனம் ரூ.8000 கோடி செலவிட்டுள்ளது.
8000 கோடிக்கு ஒப்பந்தம்
அமெரிக்காவை தளமாக கொண்டு இயங்கி வரும் Nvidia, சிப் தயாரிப்பில் ஆதிக்கம் செலுத்தி வரும் நிறுவனம் ஆகும்.
சில மாதங்களுக்கு முன்னர், 4 ட்ரில்லியன் டொலர் சந்தை மூலதனத்தை எட்டிய முதல் பொது வர்த்தக நிறுவனம் என்ற சாதனையை Nvidia படைத்துள்ளது.
இந்நிலையில், Nvidia சமீபத்தில் 900 மில்லியன் டொலரை (இந்திய மதிப்பில் ரூ.8000 கோடி) இந்திய வம்சாவளி நபர் ஒருவரை நிறுவனத்தில் இணைக்க செலவிட்டுள்ளது.
ரோச்சன் சங்கர்
இந்தியாவில் பிறந்தவரான ரோச்சன் சங்கர்(Rochan Shankar), Enfabrica என்ற AI வன்பொருள் நிறுவனத்தை சிலிக்கன் வேலியில் நடத்தி வருகிறார்.
இவர், டொராண்டோ பல்கலைக்கழகத்தில் மின் பொறியியலில் பட்டமும், வார்டன் பள்ளியில் எம்பிஏ பட்டமும் பெற்றுள்ளார். மேலும், தனது பெயரில் 6 காப்புரிமைகளை வைத்துள்ளார்.
2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட Enfabrica நிறுவனம், அதன் தொழில்நுட்பம் மூலம் 1 லட்சத்திற்கும் அதிகமான சிப்களை ஒன்றாக இணைக்க முடியும் என தெரிவித்துள்ளது.
AI மொடல்களை பயிற்றுவிக்க ஏராளமான சிப்கள் தேவை. ஆனால் நெட்ஒர்க் மெதுவாக இருந்தால், விலை உயர்ந்த சிப்கள் செயலற்றதாக இருக்கும்.
இதனை சரி செய்ய Enfabrica நிறுவனத்தின் நிறுவனர் ரோச்சன் சங்கர் மற்றும் அவரது குழுவை Nvidia தங்கள் நிறுவனத்தில் இணைத்துள்ளது.
கடந்த வாரம், 900 மில்லியன் டொலருக்கு அதிகமான ரொக்கம் மற்றும் பங்குகளுடன் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |