உலகிலேயே இரண்டாவது பெரிய பணக்காரர் யார் தெரியுமா?
போட்டியில் முதலாவதாக வரும் நபரை நினைவில் கொள்ளும் அளவுக்கு, இரண்டாவதாக வரும் நபரை யாரும் நினைவில் கொள்வதில்லை என கூறப்படுவதுண்டு.
ஆக, உலகின் முதல் பெரிய பணக்காரர யார் என்றால் அனைவருக்கும் தெரியும். ஆனால், இரண்டாவது பெரிய பணக்காரர் யார் என்பது தெரியுமா?
உலகிலேயே இரண்டாவது பெரிய பணக்காரர்
நாணயம் ஏன் வட்ட வடிவில் இருக்கிறது என்றால், அது பணம் என்பது நிலையற்றது உருண்டோடிக்கொண்டே இருக்கும் என்பதைக் காட்டத்தான் என்பார்கள்.
அதேபோல, இந்த முதலிடம், இரண்டாவது இடமெல்லாம் நிலையானவை அல்ல, அவை மாறிக்கொண்டே இருக்கும்.

ஏனென்றால், இன்று உலகிலேயே பெரிய பணக்காரர் எலான் மஸ்க் என்கிறோம். ஆனால், அவருக்கு முன், 2018 முதல் 2021 வரை உலகிலேயே பெரிய பணக்காரராக இருந்தவர் அமேசான் நிறுவனரான ஜெஃப் பெசோஸ்.
அவருக்கு முன், உலகிலேயே பெரிய பணக்காரர் என்றாலே பலரும் பில் கேட்ஸைத்தான் சொல்வார்கள்.

ஆக, இந்த முதலிடம், இரண்டாவது இடம் எல்லாம் நிலை அல்ல.
எனவே, இப்போதைக்கு உலகிலேயே இரண்டாவது பெரிய பணக்காரர் லாரி பேஜ் என்னும் அமெரிக்கர் என்கிறது ஃபோர்ப்ஸ் பத்திரிகை.

இந்த லாரி பேஜ், கூகுள் நிறுவனம் மற்றும் ஆல்பபெட் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஆவார்.
லாரி பேஜின் சொத்து மதிப்பு, ஜூன் மாதம் 12ஆம் திகதி நிலவரப்படி 296.5 பில்லியன் டொலர்கள் ஆகும்!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |